மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் : தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பேருந்துகள் : முழு விவரம்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரைக்கு 285 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
285 special buses operated to Madurai, consecration ceremony of the Madurai Meenakshi Amman Temple
285 special buses operated to Madurai, consecration ceremony of the Madurai Meenakshi Amman Templesource:thamizhalai,ai generated
1 min read

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Special buses to Madurai உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, செப்டம்பர் 17 ( வியாழக்கிழமை ) 2026 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.

மதுரையில் குவியும் பக்தர்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வைக் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரைக்கு சிறப்பு பேருந்துகள்

இந்நிலையில், கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, சீரான பயணம் மற்றும் தங்குதடையற்ற போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் 285 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

7.40 - 8.10க்குள் மகா கும்பாபிஷேகம்

17ம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

சென்னையில் இருந்து 50 பேருந்துகள்

தலைநகர் சென்னையில் இருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக, கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான 16.09.2026 அன்றே சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் (KCBT) இருந்து மதுரைக்கு 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட உள்ள பேருந்துகள் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

கோயம்புத்தூர்: 30 பேருந்துகள்

திருப்பூர்: 30 பேருந்துகள்

ராமநாதபுரம்: 30 பேருந்துகள்

ராஜபாளையம்: 30 பேருந்துகள்

தேனி: 30 பேருந்துகள்

சிவகாசி: 30 பேருந்துகள்

அருப்புக்கோட்டை: 25 பேருந்துகள்

திண்டுக்கல்: 20 பேருந்துகள்

விருதுநகர்: 10 பேருந்துகள்

மதுரை புறநகர் - சிறப்பு பேருந்துகள்

மதுரை மாவட்ட எல்லைக்குள்ளும் மற்றும் அதன் அண்டை வட்டாரப் பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் எளிதாகக் கோவில் வளாகத்தை வந்தடையும் வகையில், 7 முக்கியப் பகுதிகளில் இருந்து தலா 20 பேருந்துகள் வீதம் மொத்தம் 140 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன:

திருமங்கலம்

மேலூர்

திருப்புவனம்

வாடிப்பட்டி

நத்தம்

பூவந்தி

உசிலம்பட்டி

பக்தர்களின் கூட்ட நெரிசல் மற்றும் பயணிகளின் உடனடித் தேவைக்கேற்ப இந்த பேருந்துகளின் எண்ணிக்கை மேலும் முறைப்படுத்தப்பட்டு தடையின்றி இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in