”கார் மோதி 4 வயது மாணவி உயிரிழப்பு” : திமுக ஆட்சியின் போதை புழக்கமே காரணம் : நயினார் நாகேந்திரன் கண்டனம்

Nainar Nagendran slams DMK Government : சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில், தனது அடிப்படை கடமையை செய்ய, திமுக அரசு மறந்துவிட்டதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
4-year-old girl dies tenkasi drug addiction in DMK government is the reason Nayinar Nagendran condemns
4-year-old girl dies tenkasi drug addiction in DMK government is the reason Nayinar Nagendran condemnsgoogle
1 min read

மாணவி உயிர் இழப்பு ;நாயினர் கண்டனம்

Nainar Nagendran slams DMK Government : தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளியின் உள்ளே, போதையில் இருந்த நபர் இயக்கிய கார் மோதி 4 வயது மாணவி உயிரிழந்தார் .இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்

இந்த விவகாரம் குறித்து அவர் கூறியதாவது

திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால், பள்ளியில் இருந்த சிறுமியின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு கொடூரம் நிகழ்ந்துள்ளது.

இதற்கு மத்தியில், பள்ளிக்கல்வித்துறையினர், வருவாய்த்துறையினர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என ஒருவர் கூட சம்பவ இடத்திற்கு வராத கொடூரமும் அரங்கேறியுள்ளது.

தேர்தல் தோல்வி பயமா ?

சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில், தனது அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா? அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளளார்

நீதி பெற்று தராமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது

மொத்தத்தில், பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு நீதியை பெற்று தராமல் வேடிக்கைப் பார்க்கும் அறிவாலயம் அரசு மீண்டுமொரு முறை ஆட்சி அமைப்பதற்கு ஆசைப்படுவதற்கான தகுதியையும் இழந்துவிட்டது என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in