DMK Manifesto: 571 வாக்குறுதிகள்: இல்லத்தரசிகளுக்கு ரூ. 8,000 கூப்பன், உரிமைத்தொகை ரூ.2,000 : 8ம் வகுப்புவரை காலை உணவு!

DMK Election Manifesto 2026 : இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் முதல் 517 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
517 promises, coupon of Rs. 8,000 for housewives, made in the DMK election manifesto
517 promises, coupon of Rs. 8,000 for housewives, made in the DMK election manifesto google
2 min read

தேர்தல் வாக்குறுதிகள்

DMK Election Manifesto 2026 : தமிழகத்தை பொருத்தவரை ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக, திமுக அளிக்கும் தேர்தல் அறிக்கைகள் முக்கிய கவனம் பெறுகின்றன. இவையே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்றன.

அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி இலவசங்கள் என்ற பெயரில் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாக்குறுதிகள் இருந்தன. தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கையிலும், இவை இடம் பெற்றன.

திமுக தேர்தல் அறிக்கை

இந்தநிலையில் ஆளுங்கட்சியான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மொத்தம் 517 வாக்குறுதிகள் அதில் இடம்பெற்று இருக்கின்றன.

571 வாக்குறுதிகள்

* வரு​மான வரி செலுத்​தாத குடும்​பத்தை சேர்ந்த இல்​லத்​தரசிகளுக்கு வாஷிங் மெஷின், டிவி, பிரிட்​ஜ், மிக்​சி, மைக்​ரோவேவ் அவன், மின் அடுப்​பு​கள் போன்ற வீட்டு உபயோக பொருட்​கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்​பில் கூப்​பன் வழங்​கும் 'இல்​லத்​தரசி' திட்​டம்.

* முதல்​வரின் காலை உணவு திட்​டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்​தப்​படும்.

* 1.31 கோடி சகோதரி​கள் பெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை ​ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும்.

* இலவச மின்​சா​ரம் பெறும் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகளுக்கு நவீன மின் பம்ப்செட் வழங்​கப்​படும்.

* அடுத்த 5 ஆண்டு​களில் 10 லட்​சம் புதிய வீடு​கள் கட்​டித் ​தரப்​படும்.

* முதல்​வரின் மருத்​துவக் காப்​பீடு திட்​டத்​தில் சேர்க்​கப்​படு​வதற்​கான வரு​மான வரம்பு ரூ.5 லட்​ச​மாக​வும், காப்​பீட்​டுத்​தொகை ரூ.10 லட்​ச​மாக​வும் உயர்த்​தப்​படும்.

* நெல் கொள்​முதல் விலை குவின்​டாலுக்கு ரூ.3500, கரும்பு கொள்​முதல் விலை டன்னுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்​கப்​படும்.

* பால் கொள்​முதல் விலை லிட்​டருக்கு ரூ.5 உயர்த்தி வழங்​கப்​படும்.

* முதி​யோர் உதவித்​தொகை ரூ.1,200-ல் இருந்து ரூ.2 ஆயிர​மாக உயர்த்தப்படும்.

* மாற்​றுத் திற​னாளி​களுக்​கான உதவித்​தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்​தப்​படும்.

* மீன்​பிடி தடைக்​கால சிறப்பு நிவாரணத் ​தொகை ரூ.8 ஆயிரத்​தில் இருந்து ரூ.12 ஆயிர​மாக​வும், மீன்​பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத்​தொகை ரூ.6 ஆயிரத்​தில் இருந்து ரூ.9 ஆயிர​மாக​வும் உயர்த்​தப்​படும்.

* சுயஉதவிக் ​குழு உறுப்பின​ராக இருக்​கும் பெண்​களை, தொழில் ​முனை​வோ​ராக முன்​னேற்ற பிணையின்றி ரூ.5 லட்சம் வரை மானி​யத்​துடன் கடன் வழங்​கப்​படும்.

* மாதாந்திர உதவித்தொகை: 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ் புதல்வன்' திட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.

* இலவச லேப்டாப்: உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

* உயர்கல்வி முடித்த 5 லட்சம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்

* அனைத்து அரசு கல்லூரிகளிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

* பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

* ரூ.10,000 கோடி மதிப்பில் 15,000 கி.மீ சாலைகள் சீரமைக்கப்படும்.

* தொழில்துறை வளர்ச்சிக்காக ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்படும்

* தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்

* சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்

* 5000 திருக்கோயில்களில் குடமுழக்கு நடத்தப்படும்

இவ்வாறு 517 வாக்குறுதிகளோடு, தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டு இருக்கிறது.

================

https://www.dinakaran.com/news/pmk-final-candidate-announced-by-anbumani/

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in