

தொடர் சரிவில் தங்கம் விலை
நகைப் பிரியர்களையும் நடுத்தரக் குடும்பங்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு 2,000 ரூபாய் குறைந்திருந்த நிலையில், இன்றும் விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை மாற்றங்கள்
ஜூன் 20 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,08,800 ரூபாய்க்கும் விற்பனையானது.
ஜூன் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் தங்கம் விலையில் எவ்வித மாற்றமுமின்றி அதே விலையில் நீடித்தது.
ஜூன் 23 ஆம் தேதி சரிவுப் பாதைக்கு மாறிய தங்கம் விலை, கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 13,560 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 1,08,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஜூன் 24 ஆம் தேதி வீழ்ச்சி வேகம் எடுத்து, கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து 13,350 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் சரிந்து 1,06,800 ரூபாய்க்கும் கைமாறியது.
தங்கம் விலை நிலவரம்
நேற்று தங்கம் விலை சரிந்ததை தொடர்ந்து இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிரடியாகக் குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு மேலும் 210 ரூபாய் குறைந்து 13,140 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 1,680 ரூபாய் சரிந்து 1,05,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3 நாட்களில் மட்டும் அதிரடி சரிவு
கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் 3,680 ரூபாய் குறைந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், கடந்த 11 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 930 ரூபாயும், சவரனுக்கு 7,440 ரூபாயும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் தொடர்ந்து வீழ்ச்சி
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்து சரிவை சந்தித்துள்ளது. சில்லறை வெள்ளியின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 230 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல், கட்டி வெள்ளியின் விலை கிலோவுக்கு 10,000 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
====