10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது .இந்தநிலையில், தேர்வினை படித்த 8 லட்சத்து 82 ஆயிரம் பேரும், தனித் தேர்வகள் என 26 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர். தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் ஒன்றேகால் மணியளவில் நிறைவுபெறும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு கேள்வித்தாள் வழங்கப்படும் , 10 நிமிடங்கள் அதை படிப்பதற்கு அனுமதிக்கப்படும். பின்னர் விடைத்தாள் கொடுக்கப்பட்டு , தேர்வர்கள் விவரங்களை சாிபார்த்து கையெழுத்து இட அறிவுறுத்தப்படுகிறது .
பாதுகாப்பபு பணியில் பறக்கும் படை
தேர்வுப் பணியில் 49,500 ஆசிரியர்களும், முறைகேடுகளை தடுக்க ஐந்தாயிரம் பறக்கும் படையினரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
சந்தேங்கங்களை தெரிக்க இலவச தொலைபேசி எண்
இந்த பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தேர்வு நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 9498383075 மற்றும் 9498383076 ஆகிய இலவச எண்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .