

தமிழக அரசியல் 2 தொகுதி இடைத் தேர்தலில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அதிகரித்து இருக்கிறது.
அதிமுக - தவெக கடும் மோதல்
அரசியல் களத்தில் அதிமுக மற்றும் ஆளுங்கட்சியான தவெக இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் மறைமுகமாக சேர்ந்துகொண்டு, முதல்வர் மீது தேவையின்றித் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
தனிநபர் தாக்குதலில் எடப்பாடி
மக்கள் நலன் சார்ந்த கொள்கை ரீதியான விமர்சனங்களை முன்வைக்காமல், அரசியல் காரணங்களுக்காகத் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல.
ஜெயலலிதாவின் அதிமுக இப்போது இல்லை
ஜெயலலிதா இருந்த போதிருந்த அதிமுக இப்போது இல்லை. உட்கட்சிச் சூழல் மற்றும் பலவீனம் காரணமாக அக்கட்சி முற்றிலும் மாறிவிட்டது
"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் இருந்தபோது வலுவாக இருந்த அதிமுக, இப்போது அந்த நிலையில் இல்லை" என்று தெரிவித்த அவர், தற்போதைய அதிமுக தனது தனித்துவமான அரசியல் முகத்தையும் பலத்தையும் இழந்து நிற்கிறது.
விசுவாசிகள் வெளியேற்றம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உண்மையான விசுவாசிகளாக இருந்த பல முக்கியத் தலைவர்களும் தொண்டர்களும் அதிமுகவிலிருந்து படிப்படியாக வெளியேறிவிட்டனர்.
பாமகவால் அதிமுக வெற்றி
பாமக கூட்டணி மற்றும் தேர்தல் வெற்றி குறித்தப் புள்ளிவிவரங்கள்
கடந்த காலத் தேர்தல் கள நிலவரங்களை நினைவு கூர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பாமகவின் கூட்டணி ஆதரவு இல்லையென்றால் அதிமுகவினால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
பாமக கூட்டணி அமைக்காமல் தனியாக நின்றிருந்தால் அதிமுகவால் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கவே முடியாது
மறந்து விட்டு பேசுகிறார் எடப்பாடி
பலமான ஆதரவு மற்றும் வாக்கு வங்கியின் காரணமாக மட்டுமே அதிமுக பல இடங்களில் வெற்றி பெற்றுச் சட்டமன்றத்திற்கு வர முடிந்தது என்பதைத் தற்போதைய அதிமுக தலைமை மறந்துவிட்டுப் பேசுகிறது என்று ஆதவ் அர்ஜுனா கடுமையாக சாடினார்.
==================