

கொள்கைத் தலைவர் பெரியார்
திராவிட கட்சிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னோடி தலைவர், கொள்கை தலைவர் அப்படின்னு பார்த்தா அது பெரியார் தான். எனவே, அவர் பெயரில கோவையில 300 கோடி செலவில பெரியார் அறிவுலகம் என்ற பிரமாண்ட நூலகத்தை கட்ட கடந்த திமுக அரசு பணிகளை தொடங்கிச்சு.
கோவை பெரியார் அறிவுலகம்
கிட்டத்தட்ட 99 சதவீத பணிகள் முடிஞ்ச நிலையில, ஆட்சி மாற்றத்துக்கு பிறகு பெரியார் அறிவுலகத்த முதல்வர் விஜய் திறந்து வச்சாரு. 7 ஏக்கர் பரப்பளவு, 7 மாடி கட்டிடம் என பிரமாண்டமாக அமைஞ்சி இருக்கு அறிவுலகம். இதை முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் பார்வையிட, அவருக்கு திராவிட கழகம் சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
சர்ச்சையில் பெரியார் அறிவுலகம்
இப்படி தடபுடலா பயன்பாட்டிற்கு வந்த பெரியார் அறிவுலகம் இப்போ பெரும் சர்ச்சையில் வந்து சிக்கி இருக்கு. கோவை பெரியார் அறிவுலக நூலகத் திட்டத்தின் நான்காவது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவை எழுத்தாளர் பெருமாள் முருகன் நேரில் ஆய்வு செய்தபோதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
பெருமாள் முருகன் குற்றச்சாட்டு
இதுபற்றி ‘சிந்தை’ இணைய இதழில் அவர் வெளியிட்ட கட்டுரை, இலக்கிய வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கு.
யாருக்குமே தெரியாத சில பதிப்பங்கள் வழியாக சுமார் ஆயிரத்து எண்ணூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அவசர கதியில் கொள்முதல் செய்யப்பட்டு பெரியார் நூலகத்தை அலங்கரிக்குது.
ஏஐ-யால் உருவாக்கப்பட்ட நூல்கள்
அதில் இடம்பெற்ற பல நூல்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் அவசரமாகத் தொகுக்கப்பட்டவை என்பது மட்டுமல்லாம, மிக மோசமான வரலாற்றுப் பிழைகளோட அச்சிடப்பட்டு இருக்கு.
சமண முனிவர்கள் பாடிய நாலடியாருக்குக் கற்பனையாக ஒரு ஆசிரியர் பெயர் சூட்டப்பட்டு இருக்கு.
மகாகவி பாரதியார் எழுதாத கற்பனைக் கதைகள் அவர் பெயரிலேயே நூலாக்கம் செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தன.
உ்ண்மை வரலாறு திரிபு
தமிழகத்தின் உண்மை வரலாற்றை மறைத்து இல்லாத முதல்வர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்ததோடு, பல நூல்களுக்குப் போலியான பன்னாட்டுத் தரப் புத்தக எண்களும் (ISBN), முகவரிகளும் அச்சடிக்கப்பட்டு இருக்கு.
அதிக விலையில் நூல்கள் கொள்முதல்
பொதுச்சந்தையில் முன்னூறு ரூபாய் விலையுள்ள சாதாரண நூல்களுக்கு அரசு கொள்முதல் விலையாக ஆயிரத்து நானூறு முதல் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை நிர்ணயித்து மக்கள் வரிப்பணம் பல கோடிகளில் சுருட்டப்பட்டு இருக்கிறது பெருமாள் முருகன் கட்டுரையால பொதுவெளிக்கு வந்திருக்கு.
சரி முறைகேடு எப்படி நடந்து இருக்கும் அப்படின்னு பார்த்தோம்ன்னா, காலவரிசையை பார்க்கும் போது, தெளிவான இடைவெளி தெரியவருகிறது.
பிப்வரிக்கு பிறகு செயல்படாத தேர்வுக்குழு
திமுக அரசால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட நூல் தேர்வுக் குழு, கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. குழுவோட செயல்பாடும் முடக்கி வைக்கப்பட்டதா சொல்லப்படுது.
தரமற்ற 1,800 நூல்கள்
சர்ச்சையில் சிக்கி இருக்கிற 1,800 மேற்பட்ட தரமற்ற போலி நூல்கள் கொள்முதல் ஆணைகள் அனைத்தும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலான குறுகிய இடைவெளியில் வழங்கப்பட்டு இருக்கு.
அரசு அமைப்பில் நிபுணர் குழுவின் பரிந்துரையின்றி இவ்வளவு பெரிய அளவிலான நூல்கள் உள்ளே நுழைக்கப்பட்டது தான் சந்தேகத்தை எழுப்புது.
அதிகாரிகள் உடந்தையா?
ஒன்னு அமைச்சருகே தெரியாம, நூலகத் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் இடைத்தரகர்கள், போலிப் பதிப்பகங்களுடனும் கைகோர்த்து பணம் பெற்று தன்னிச்சையா ஒப்புதல் வழங்கி இருக்கும்.
அப்படி இல்லேன்னா, மேலிட அரசியல் அழுத்தங்களின் காரணமாகத் தேர்வுக் குழுவை கண்டுக்காம, அதிகாரிகள் அபத்தமான நூல்களை வாங்கி இருக்கணும்.
தவெக - திமுக பரஸ்பர குற்றச்சாட்டு
இந்த விவகாரம் வெளியானதுமே ஆளும் தவெக தரப்பிற்கும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் யுத்தம் நடந்து வருது.
பெரியாரின் பெயரைச் சொல்லிக்கொண்டு முந்தைய திமுக ஆட்சியில் மாணவர்களுக்கான அறிவு மையங்களில் கூட ஊழல் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டியு இருக்காரு.
துறை அமைச்சர் ராஜ்மோகன், திமுக ஆட்சிக் காலத்திலேயே இந்த மோசடிக்கான தொடக்கப் புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு போலியான நூல்கள் அனைத்தையும் அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் உறுதியளிச்சு இருக்காரு.
இதற்குப் பதிலடி கொடுத்து இருக்கிற திமுக, அறிவுலக நூலகம் திறக்கப்பட்டு நூல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பது தவெக ஆட்சியில் தான்.
கொள்முதல் செய்யப்பட்ட நூல்களை ஆய்வு செய்து அனுப்புற பொறுப்பு இந்த அரசோட பொறுப்பு தான் அப்படின்னு அடித்து சொல்லுது.
அகல்விளக்கு பதிப்பகம்
அகல்விளக்கு பதிப்பகத்தில் வெளியான புத்தகங்களின் ஆசிரியர்களின் பெயர்களும் விவாதப் பொருளாகி இருக்கு. குறிப்பாக, ‘திரிஷா விஜய்’ எழுதிய ‘அதிகாரத்தின் நிழலில் – இந்தியாவில் துன்புறுத்தலின் அரசியல்’ என்ற புத்தகம் கவனம் ஈர்த்து இருக்கு.
பெயரே தெரியாத ஆசிரியர்கள்
விஜய் பாலு, விஜய் ஆதித்யன், விஜய் செல்வம், சுமேகா விஜய், ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், ஜோதிலட்சுமி, அன்பழகன், நிவேதா அன்பழகன், தாமரை பன்னீர் போன்ற இதுவரை எழுத்துலகில் பரிச்சயமில்லாத நூலாசிரியர்களின் பெயர்களும் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கு.
சக்தி சூர்யா என்ற எழுத்தாளர் பெயரில ’மக்கள் காவல் பாதுகாப்பு’ என்ற புத்தகம் வந்திருக்கு. அப்படி ஒரு புத்தகத்தை தான் எழுதவே இல்லை என்று அவர் சொல்லி இருக்காரு.
பெரியார் அறிவுலகத்தில் உள்ள அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் போலி நூல்களில் ‘ஜூன்’ மாதம் என முத்திரையிடப்பட்டுள்ளது. அதில் உள்ள தேதி, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் என திமுக குற்றம் சாட்டுது.
அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தும் போலியானவை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்திய அரசின் ISBN அப்படிங்கிற பன்னாட்டுத் தரப்புத்தக எண் அமைப்பில் அகல்விளக்கு பதிப்பகம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதாவும், 2,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் ISBN-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
பதில் அளிக்காத ஆசிரியர்கள்
புத்தகங்களில் மன்னிகவே முடியாத வரலாற்று பிழைகள், அபத்தமான கருத்துகள் இருக்கிறதா குற்றச்சாட்டும், சர்ச்சையும் எழுந்து 24 மணி நேரம் கடந்து விட்ட நிலையிலும், அவற்றை எழுதிய எந்த ஆசிரியரும் இதுவரை விளக்கம் எதையும் தரலை.
அழகிய பெரியவன் விளக்கம்
பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான புத்தகங்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்ற எழுத்தாளர் அழகிய பெரியவன் தனது விளக்கத்தில் சொல்லி இருக்கிறது என்னன்னா, உறுப்பினர்களா இருந்த 135 பேரும் பரிந்துரைத்த நூல்கள் வெளிப்படையானவை,. அவை எல்லாம் இணையத்தில் உள்ளன.
எனவே, உறுப்பினர்கள் பரிந்துரைத்த நூல்களோட பட்டியலை பார்த்தாலே, அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்களை பரிந்துரை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து விடலாம். மேலும் பரிந்துரை செய்யப்படும் நூலை நேரடியாக வாங்க முடியாது.
நூல் தேர்வுக் குழு தேர்வு செய்து, கொள்முதல் குழு விலையை நிர்ணயித்து உயர்நிலை குழு கண்காணிப்பில் தான் கொள்முதல் நடக்கும். எனவை அதிகாரி மட்டத்தில் தான் தவறு நடந்து இருக்கும் அப்படின்னு சொல்லி இருக்காரு.
மக்கள் வரிப்பணத்தில் அறிவுலகம்
எனவே, தவறு எங்கு நடந்தது அரசியல் தலையீடு இருந்ததா? அதிகாரிகள் மட்டும் ஊழலில் ஈடுபட்டாங்களா, ஊழல் யார் ஆட்சியில நடந்தது? அப்படிங்கிறது தமிழக மக்களுக்கு தெரிய வேண்டியது அவசியம். ஏன்னா, மக்கள் பணமாக 300 கோடியில தான் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு இருக்கு.
வெள்ளை அறிக்கை வெளியிடுமா தமிழக அரசு
இந்த விவகாரத்தில தமிழக அரசு வெள்ளை அறிக்கை ஒன்ன வெள்யிட்ட மட்டுமே முழு உண்மையும் வெளிச்சத்துக்கு வரும். அது தான் மக்களோட எதிர்பார்ப்பாவும் இருக்கு.
==============