TVK : ‘உங்க விஜய் நா வரேன்’ : நாளை பிரசாரம், லோகோ வெளியீடு

TVK Vijay Election Campaign Tour Logo Launch : தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை நாளை தொடங்க உள்ள நிலையில், அதற்கான லோகோ வெளியிடப்பட்டு உள்ளது.
TVK Vijay Election Campaign Tour Logo Launch in Tamil
TVK Vijay Election Campaign Tour Logo Launch in Tamil
1 min read

திருச்சியில் நாளை தேர்தல் பிரசாரம் :

TVK Vijay Election Campaign Tour Logo Launch : தமிழக வெற்றிம் கழகம் என்ற கட்சியை தொடங்கிய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய், விக்கிரவாண்டியில் முதல் மாநாடு, மதுரையில் 2வது மாநில மாநாட்டை நடத்தி தனது பலத்தை நிரூபித்தார். சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்களே இருப்பதால், தனது அரசியல் சுற்றுப் பயணத்தை அவர் தொடங்குகிறார்.

மக்களை சந்திக்கிறார் விஜய் :

திருச்சியில் நாளை அவர் பிரசாரம் செய்யும் நிலையில், காவல்துறை விதித்த 23 நிபந்தனைகளை ஏற்று இந்தப் பயணம் அமையும் என தவெக(TVK Vijay Trichy Campaign) தெரிவித்துள்ளது. இதற்காக பிரசார வாகனமும் தயாராக உள்ளது.

திருச்சி மரக்கடையில் முதல் பிரசாரம் :

விஜயின் முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியில் தொடங்குகிறது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து மரக்கடையில் பேச அனுமதிக்கப்பட்ட இடம் வரை காருக்குள் இருந்துதான் பயணம் செய்ய வேண்டும், பிரசார வேனில் நின்றபடி பிரசாரம் செய்யக் கூடாது. மீறினால் சுற்றுப் பயணத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

நெருக்கடியை சந்திக்கும் திமுக :

விஜயின் பிரசார சுற்றுப்பயணம் பல்வேறு கட்டங்களாக நடக்கிறது. டிசம்பர் 20ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்து மக்களை சந்திக்கிறார். அரசியல் எதிரியாக விஜய் கூறும் ஆளும் கட்சியை அவர் கடுமையாக எதிர்த்து பேசுவார் என்பதால், அது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க : TVK : நிபந்தனைகளை ஏற்றார் விஜய் : திருச்சியில் 13ம் தேதி பிரசாரம்

பிரசார லோகோ வெளியீடு :

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார லோகோவை(TVK Campaign Logo) அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். அந்த லோகோவில் ‘உங்க விஜய் நா வரேன்’. ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’. ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in