
ரஜினிகாந்தின் “கூலி” :
Coolie Movie FDFS Review in Tamil : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஆமீர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர் என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து இருக்கிறது.
கூலி படத்திற்கு ‘ஏ’ சென்சார் :
கூலி படத்துக்கு ‘ஏ’ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான டிக்கெட் புக்கிங் கடந்த 8ம் தேதி தொடங்கியது. சில மணி நேரங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. அடுத்த மூன்று நாட்களுக்கு அதாவது ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.
ரஜினிக்கான படம் தான் ‘கூலி’ :
இந்தப் படம் எல்சியுவில் வராது, ரஜினிக்கான பிரத்யேகமான கதையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது’ என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் உலகம் முழுவதும் வெளியாகி வரும் ‘கூலி’ திரைப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் லுக் சூப்பர் :
‘ரஜினியின் டிஏஜிங் லுக் சிறப்பாக இருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் தோற்றம் படம் பார்த்த அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறது. சவுபின் ஷாயிருக்கு முழு நீள கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருப்பதை ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள். முதல் பாதி காமெடியின் கூடிய விறுவிறுப்புடன் இருப்பதாக பலர் தெரிவித்து வருகிறார்கள்.
அனிருத் இசைக்கு வரவேற்பு :
நாகார்ஜூனா, சவுபின் ஷாயிரின் கதாபாத்திரம் கணிக்க முடியாத வகையில் இருப்பதாகவும், மாறுபட்ட ரஜினியின் கதாபாத்திரங்கள் ரசிக்கும்படி இருப்பதாகவும் கூறியுள்ளனர். அனிருத் சிறப்பான இசை அமைத்து இருப்பதாக பலர் பதிவிட்டு இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் vs நாகார்ஜூனா :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நாகர்ஜூனா இருவரும் ஸ்டைலாக இருப்பதாகவும், சவுபின் ஷாயிர் கதாபாத்திரம் மற்றும் அவருக்கான காட்சிகள் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
லோகேஷ் படம் இல்லை, ரஜினியின் படம் :
லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்கள் போல இல்லாமல், இந்தப் படத்தின் திரைக்கதையில் பெரிய அளவில் ஆச்சரியங்கள் இல்லை. ஹாஸ்டல் காட்சியும், சவுபின் ஷாயிருக்கான காட்சியும் சிறப்பாக இருக்கிறது. ரஜினியின் ஸ்டைலான நடிப்பு, இசை, பாடல்கள் சிறப்பான இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க : ’அபூர்வ ராகங்கள் - கூலி’ : ரஜினியோடு பயணம், கிருஷ்ணவேணி தியேட்டர்
கமர்ஷியல் வெற்றிப் படம் ‘கூலி’ :
அண்டை மாநிலங்களில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சியுடன் கூலி திரையிடப்பட்டது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் கூலி ரிலீசானது. படத்திற்கு கலவையான விமர்சனங்களை(Coolie Movie Review) ரசிகர்கள் தெரிவித்து வந்தாலும், கமர்ஷியலாக கூலி வெற்றி படம் தான் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.
====