ஆட்சியர் உமாவை சந்திக்க வேண்டும் : நடிகர் சூரி

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய உமாவை நேரில் சந்தித்து நன்றி கூற விரும்புவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் உமாவை சந்திக்க வேண்டும் : நடிகர் சூரி
https://x.com/sooriofficial
1 min read

நடிகர் சூரி தனது எக்ஸ் தள பதிவில் இது பற்றி தெரிவித்திருப்பதாவது :

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி உமா அவர்களை, திருநங்கை சகோதரிகள் கண்ணீர் மல்க, திருநீறு பூசி, உள்ளம் நெகிழ்ந்து வழியனுப்பிய காட்சி, மனதை ஆழமாகத் தொட்டு கண்களை ஈரமாக்கியது.

அவர்களின் இந்த அன்பும், மனிதநேயமும், ஆட்சியர் அவர்களின் அர்ப்பணிப்பும், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு இதயத்திலும் ஆழமாகப் பதிந்து விட்டது என்பதற்கு இந்தக் காட்சியே மிகப் பெரிய சான்று.

இப்படி ஒரு உள்ளம் கொண்ட ஆட்சியரை ஒரு நாள் நேரில் சந்தித்து, என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றியைச் சொல்ல வேண்டும் என்பது என் ஆத்மார்த்தமான ஆசை.

உங்கள் பணிக்காகவும், மக்களின் இதயங்களில் நீங்கள் விட்டுச் சென்ற அழியாத அன்பின் முத்திரைக்காகவும் என்றென்றும் நன்றி.

இவ்வாறு நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in