தவெக தொண்டரின் பதிவு : கடுமையாக பதிலடி கொடுத்த குஷ்பு!

Kushboo Sundar on TVK Member : பிகார் வெற்றி குறித்து டுவீட் செய்த குஷ்புவின் பதிவை ரீடுவிட் செய்த தவெக தொண்டரின் டுவீட்டிற்கு கராசார பதிலளித்த குஷ்புவின் பதிலடி வைரலாகி வருகிறது.
Actress Cum Politician Kushboo Sundar Responded to TVK Member Tweet About Her Husband Sundar C  Movie Dropped News in Tamil
Actress Cum Politician Kushboo Sundar Responded to TVK Member Tweet About Her Husband Sundar C Movie Dropped News in Tamil Google
1 min read

குஷ்பு சினிமா வட்டாரம்

Kushboo Sundar on TVK Member : குஷ்பூ 80ஸ் 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் தனக்கென ஒரு தனித்துவ அடையாளமும், ஒரு ரசிகர் பட்டாளமும் கொண்டு தனித்துவமாக விளங்கியவர் நடிகை குஷ்பூ.கதா நாயகி என்பதை தாண்டி தற்போது அரசியல் வாதியாகவும் தனித்துவம் பெற்று வருகிறார்.

படங்கள் தயாரிக்கும் வேலைகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பு சமீபத்தில் ஒரு புதிய சீரியலிலும் நடிக்க துவங்கியுள்ளார் என்பது அனைரும் அறிந்ததே. சினிமாக்களின் ஆரம்பம் காலம் முதலே எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசக் கூடிய குஷ்பு, அரசியலுக்கு பிறகு பல்வேறு பிரச்சனைளில் சிக்கியும், அதற்கு நேரடி பதிலும் அளித்து வருகிறார்.

குஷ்பு - சுந்தர் சி விவரம்

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க சுந்தர். சி இயக்க படம் உருவாக இருந்த நிலையில், சில காரணங்களால் அப்படத்தில் இருந்து சுந்தர். சி விலகி விட்டார். இந்த அறிவிப்பு வெளிவந்தது முதல் நெட்டிசன்கள், ரஜினி கமல் ரசிகர்கள் முதல் அரசியல் வட்டாரங்கள் வரை என பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பிகார் தேர்தல் நிலவரத்தில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் வெற்றியை அரசியல் பிரமுகராக தனது எக்ஸ் பக்கத்தில் வெற்றி பெற என்ன தேவை என்பதை அவர்கள் காட்டுகிறார்கள் என என்டிஏ கூட்டணி வெற்றியையும், மோடி நிதிஷ்குமார் இணைந்த புகைப்படத்தையும் வெளியிட்டு, காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது, ராகுல்காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு இன்னுமொரு காரணமும் வாய்ப்பும் கிடைத்துள்ளது என்று பதிவிட்டார்.

தவெக டுவீட்டிற்கு குஷ்பு பதிலடி

இந்நிலையில், குஷ்புவின் அரசியல் டுவீட் இன்டியா கூட்டணி மத்தியில் விமர்சனங்களை உருவாக்கி வந்த நிலையில், இதனை ரீடுவிட் செய்த தவெக தொண்டர் ஒருவர், சுந்தர சி.யின் பரிதாபகரமான கதை விவரிப்பு காரணமாக ரஜினியும் கமலும் உங்கள் கணவரை தங்கள் தயாரிப்பு படத்திலிருந்து நீக்கியதாகக் கேள்விப்பட்டேன்.

அப்படியானால் இந்தியத் திரையுலகம் உங்கள் கணவர் சுந்தர் சி.யை குப்பைத் தொட்டியில் போட வேண்டிய நேரமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குஷ்பு ஆவேசம்

இவரின் இந்த பதிவிற்கு பதிலளித்த நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பு “என் செறுப்பு சைஸ் 41, அடி வாங்க தயாரா !” என முகம் சுளிக்கும் பதிலளித்துள்ளார். இவரின் இந்த கருத்தும், பதிவும் வைரலாகி வரும் நிலையில், இதற்கு நெட்டிசன்கள் பலரும் பதிவை ஷேர் செய்து, கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in