அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி : ‘கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக’ கடிதம்! தவெகவில் இணையப் போகிறாரா?

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து நடிகை கவுதமி விலகியுள்ளார். அதன் முழு விவரம்...!
Actress Gautami quits AIADMK: A sensational letter stating she is leaving with a ‘heavy heart’! Will she join TVK?
Actress Gautami quits AIADMK: A sensational letter stating she is leaving with a ‘heavy heart’! Will she join TVK?source: google
1 min read

அதிமுகவில் இருந்து விலகிய கௌதமி

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகையும், அரசியல் பிரமுகருமான கௌதமி அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், தனது சமூக சேவைகளைத் தொடர்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விலகல்

மேலும், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து கனத்த இதயத்துடன் விடைபெறுவதாகவும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பாஜக முதல் அதிமுக வரை கௌதமியின் அரசியல் பயணம்

கடந்த 1997-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த கௌதமி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பயணித்தார். எனினும், கடந்த 2023-ம் ஆண்டு கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவிலிருந்து விலகினார்.

பாஜகவில் இருந்து வெளியேறியதற்கான காரணம்

குறிப்பாக, தனது வாழ்நாள் சம்பாத்தியத்தை ஏமாற்றிய நபருக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆதரவாகச் செயல்பட்டதாகவும், தனக்கு கட்சியிடமிருந்து எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி பாஜகவை விட்டு வெளியேறினார்.

2024 அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட கௌதமி

இதனைத் தொடர்ந்து, கடந்த 2024 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பு மற்றும் கட்சியை வழிநடத்தும் விதம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்தார்.

கொள்கைபரப்பு துணைச் செயலாளர் பதவி

அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு அதிமுக வேட்பாளர்களுக்காக அவர் வாக்கு சேகரித்தார்.

இரண்டே ஆண்டுகளில் விலகல்

இந்நிலையில், அதிமுகவில் இணைந்த இரண்டே ஆண்டுகளில் அவர் கட்சியிலிருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெகவில் இணைவாரா கௌதமி?

இந்நிலையில் அரசியல் வட்டாரங்களில் சில கட்சிகள் கூட்டனியில் இருந்து விலகுவதாக அறிவிப்பதும் சிலர் கட்சியிலிருந்து விலகுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கௌதமியும் அதிமுகவில் இருந்து விலகி இருப்பதால் தவெகவில் இணைவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in