
அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக காவல்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில், அவரை இடைநீக்கம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டார்.
சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ஜெயராம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது விசாரணைக்கு ஏற்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் அமர்வு, இன்று விசாரணை நடத்தியது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று ஜெயராம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத தன்னை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.
இவற்றை கேட்ட நீதிபதிகள், ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பான விளக்கத்தை தமிழக அரசு நாளை தெரிவிக்க அவர்கள் உத்தரவிட்டனர்.
இது குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
தமிழக அரசு அளிக்கும் பதிலை பொறுத்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
=====