
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்தது தெரிய வந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஆள் கடத்தல், குற்றச் செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராம், அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக காவல்துறை குற்றம் சாட்டியது.
கடத்தப்பட்ட சிறுவனை தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது.
உயர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது சீருடையில் சென்ற ஏடிஜிபி ஜெயராம், சாதாரண உடையில் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தியிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதனிடையே, திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெயராமனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.
அவரை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில் அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
ஏடிஜிபி ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே கைது நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஏடிஜிபி ஜெயராம்.
இது நாளை விசாரணைக்காக பட்டியல் இடப்பட்டுள்ளது.