
திருவள்ளூரில் காதல் திருமண விவகாரத்தில் எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியுடன் இணைந்து சிறுவனை கடத்தியதாக இவர் மீது புகார் எழுந்தது.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார்.
பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, . ஜெகன்மூர்த்தியும், ஏடிஜிபி ஜெயராமனும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
ஏடிஜிபி மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தவறு செய்யவில்லை என்றால், எதற்காக காவல்துறை விசாரணையை தடுத்தீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்திலேயே ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.
ஜெகன்மூர்த்தியின் செயல்பாடு குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்த நீதிபதி, விசாரணையை 26ம் தேதி ஒத்தி வைத்தார்.
ஆள் கடத்தல் வழக்கில் உயர் பொறுப்பில் உள்ள ஏடிஜிபி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
----