”டெல்லியில் எடப்பாடி, அமித் ஷாவுடன் பேச்சு!” : இறுதியாகும் தொகுதிப் பங்கீடு : சென்னையில் நாளை கையெழுத்து?

டெல்லி சென்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில், தொகுதி பங்கீடு இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ADMK alliance Seat sharing will finalized, talks between Edappadi Palaniswami and Amit Shah in Delhi
ADMK alliance Seat sharing will finalized, talks between Edappadi Palaniswami and Amit Shah in Delhigoogle
1 min read

திமுக கூட்டணி

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை படிப்படியாக நிறைவு பெற்று வருகிறது.

மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகி விட்டால், தொகுதி பங்கீடு நிறைவு பெற்று விடும்.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணியை பொருத்தவரை, தவெக என்டிஏ கூட்டணிக்கு வராததால், பெரிய அளவில் சிக்கல் வர வாய்ப்பில்லை.

சுமார் 160 தொகுதிகளில் அதிமுக, 30 தொகுதிகளில் பாஜக, 20 தொகுதிகளில் அன்புமணி என்றாலும், மீதமிருக்கும் 24 தொகுதிகளை மற்ற கட்சிகளுக்கு ஒதுக்க முடியும்.

தமிழக வெற்றிக் கழகம்

முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. கூட்டணிக்கு யாரும் வராத நிலையில், தனியாகவே மோதுகிறது தவெக.

நாம் தமிழர் கட்சி

சீமானின் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. வேட்பாளர்களை அறிவித்து விட்ட சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

டெல்லியில் எடப்பாடி

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அமித் ஷாவுடன் சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது. அப்போது பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது இறுதியாகி விடும் என்று கூறப்படுகிறது.

29 அல்லது 30 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இறுதி செய்யப்படும் தொகுதிகள்

இதனிடையே, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்றிரவு சென்னை வருகிறார்.

எத்தனை தொகுதிகள் என்பது உறுதியாகி விட்டதால், யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார்.

நாளை ஒப்பந்தம் கையெழுத்து

அதன் அடிப்படையில், அதிமுக - பாஜக இடையே நாளை தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

இந்த வார இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட எடப்பாடி பழனிசாமி முனைப்பு காட்டி வருகிறார்.

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in