திமுக ஆட்சியில் ‘உருட்டு கடை அல்வா’ தான்:எடப்பாடி பழனிசாமி கிண்டல்

Edappadi Palanisamy Criticized DMK Government With Halwa : திமுக அரசில் உருட்டு கடை அல்வாதான் கிடைக்கும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கிண்டல் செய்துள்ளார்.
ADMK Chief Edappadi Palanisamy Criticized DMK Government With Uruttukadai Halwa Of Empty Packet Read EPS Latest News in Tamil
ADMK Chief Edappadi Palanisamy Criticized DMK Government With Uruttukadai Halwa Of Empty Packet Read EPS Latest News in Tamil
1 min read

இருமல் மருந்து - தமிழக அரசு அலட்சியம்

Edappadi Palanisamy Criticized DMK Government With Halwa : தமிழக சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தும் மருந்து உற்பத்தியை அரசு கண்காணிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டது. இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு மிகுந்த அலட்சியமாக இருப்பதாக புகார் வந்துள்ளது.

சோதனையே நடைபெறவில்லை

சுகாதாரத் துறை அமைச்சர் ஏதோ ஏதோ சொல்கிறார். அரசின் அலட்சியத்தின் காரணமாக 25 குழந்தைகள் இறந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மருந்து நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டும் 2024, 2025ல் அரசு சோதனை செய்யவில்லை.

உருட்டு கடை அல்வா தான் கிடைக்கும்

திமுக அரசாங்கத்தில் உருட்டு கடை அல்வா தான் கிடைக்கும். 2021ம் ஆண்டில் தீபாவளியின் போது 525 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் 10 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. எல்லாத்துக்கும் அல்வா கொடுத்துவிட்டார்.

மேலும் படிக்க : TN Assembly: கிட்னிகள் ஜாக்கிரதை : பேட்ச் அணிந்த ADMK எம்எல்ஏக்கள்

மக்களை ஏமாற்றும் திமுக அரசு

இப்பொழுது நீங்கள் இந்த உருட்டு கடை அல்வா(Uruttukadai Halwa), எப்படி டேஸ்ட் ஆக இருக்கிறதா என்பதை சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள். எந்த அளவுக்கு இந்த அரசு அல்வா கொடுத்து ஏமாற்றுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

=========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in