
மக்களுக்காக பாடுபடுவது அதிமுக :
Edappadi Palanisamy on DMK Government : சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் அவர், முசிறியில் பொதுமக்களிடையே உரையாற்றினார். “மக்களுக்கான கட்சி அதிமுக, குடும்பத்துக்கான கட்சி திமுக. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி என இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய அதிமுக மக்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் எந்த ஆட்சி சிறந்த ஆட்சி என்பது தெரியும்.
திமுகவுக்கு குடும்பமே முக்கியம் :
அதிமுக ஆட்சியில் மக்கள் ஏற்றம் பெற்றார்கள், தமிழகம் ஏற்றம் பெற்றது. திமுகவுக்கு வீட்டு மக்கள் தான் முக்கியம். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை அடிமைபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஜனநாயகமுள்ள கட்சி, விசுவாசமாக உழைத்தால் சாதாரண தொண்டன் கூட உச்சப் பதவிக்கு வரமுடியும். திமுகவில் வர முடியுமா? கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே வரமுடியும். நான் படிப்படியாக பொதுச்செயலாளராக உயர்ந்தேன். இதுதான் அதிமுக.
வாரிசு அரசியலே திமுகவில் பிரதானம் :
திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என மூவரும் முக்கிய பதவிகளை எடுத்துக் கொண்டனர். ஆட்சி அதிகாரத்தில் தமிழகத்திலும் மத்தியிலும் கருணாநிதி குடும்பம் மட்டும்தான் வரமுடியும். அங்கே அப்படி என்றால், இங்கு அமைச்சர் நேருவும் அப்படித்தான். கருணாநிதி குடும்பம் மட்டும்தானா, என்னுடைய குடும்பத்திலும் வாரிசு இருக்க வேண்டும் என்பதற்காக நேரு தன் மகனை எம்பியாக்கினார்.
சாதாரண மனிதருக்கும் அதிமுகவில் பதவி :
ஆனால் அதிமுகவில் பெயின்டராகவும், டாஸ்மாக் பணியாளராகவும் இருந்தவர்களுக்கு எம்எல்ஏ பதவி கொடுத்தோம். மதம், ஜாதி அடிப்படையில் அதிமுக செயல்படுவதில்லை. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. அமைச்சர் ரகுபதி பேட்டி கொடுக்கிறார். ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதல்வராக வருகிறாராம்.
2026ல் வாரிசுகளுக்கு இடமில்லை :
2026 தேர்தலில்(TN Assembly Elections 2026) கருணாநிதி குடும்பத்துக்கு இடமில்லை, சம்மட்டி அடி கிடைக்கும். குடும்பத்துக்கு வாய்ப்பு ஸ்டாலினுடன் முடிந்து விட்டது. அதிமுகதான் ரகுபதிக்கு அடையாளம் கொடுத்தது. இந்த தேர்தலுடன் திமுகவின் கதை முடிந்துவிடும்.
மேலும் படிக்க : ’ஓய்வு பெறும் காலத்தில் கட்சி’ : விஜய்யை வெளுத்த எடப்பாடி
விவசாயிகளுக்கான கட்சி அதிமுக :
விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami) பேசினார்.
==