
சினிமாவின் ஆளுமை ’கமல், ரஜினி’ :
Edappadi Palanisamy Wishes Actor Rajinikanth : எம்ஜிஆர், சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக தமிழ் திரையுலகில் பெரும் ஆளுமைகளாக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் திரையுலகில் கால்பதித்து 66 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் ஹீராவாக வலம் வருகிறார் அவர். அவரை போன்றே நடிகர் ரஜினிகாந்தும் திரையுலகில் கால்பதித்து 50 ஆண்டுகள்(Rajini 50) நிறைவடைகிறது.
1975 முதல் சினிமா பயணம் :
தனது சினிமா பயணத்தை 1975 ஆம் ஆண்டு தொடங்கிய ரஜினிகாந்த் இன்று வரை படங்களில் நடித்து வருகிறார். ஐந்து தசாப்த சினிமா வாழ்க்கையில் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்(Super Star Rajinikanth) பிடித்துள்ளார். 74 வயதிலும் உச்சத்தில் இருக்கும் நடிகராக வலம் இந்திய சினிமாவில் வலம் வருகிறார் ரஜினிகாந்த்.
171வது படம் ‘கூலி’ :
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்(Rajinikanth 171th Film Coolie) 'கூலி'. நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக வெளியாகும் 'கூலி' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 170 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. 'கூலி' திரைப்படம் அவரது 171-வது திரைப்படமாகும். ஐரோப்பிய நாடுகளில் கூலி இன்று ரிலீசாகிறது.
ரஜினிகாந்திற்கு குவியும் வாழ்த்து :
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு(Rajinikanth Wishes) அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி(EPS) விடுத்துள்ள அறிக்கையில், திரையுலகில் ஸ்டைலாலும் தனித்துவ நடிப்பாலும் 50 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு வாழ்த்து(Edappadi Palanisamy Congrats Rajinikanth) தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : ’அபூர்வ ராகங்கள் - கூலி’ : ரஜினியோடு பயணம், கிருஷ்ணவேணி தியேட்டர்
‘கூலி’ வெற்றியடைய வாழ்த்து :
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பொன்விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படம்(Coolie Movie) வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்“, இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
====