‘நடிக்காதீங்க ஸ்டாலின்’: காமராஜர் குறித்த பேச்சு, எடப்பாடி கண்டனம்

EPS on Kamarajar Issue : காமராஜர் குறித்த சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்?. அவதூறு வீசுவது யார்? நடிக்காதீங்க ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.
ADMK Chief Edappadi Palaniswami Slams Trichy Siva About Kamarajar Controversy Speech Issue
ADMK Chief Edappadi Palaniswami Slams Trichy Siva About Kamarajar Controversy Speech Issue
1 min read

திருச்சி சிவாவுக்கு கண்டனம் :

EPS on Trichy Siva on Kamarajar Issue : இது தொடர்பாக தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “கல்விக்கண் திறந்த காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுகவின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா?.

திமுகவினர் பேசுவது நகைமுரண் :

காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண். அவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா(Trichy Siva About Kamarajar) தானே? அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க அவர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது திமுகவினர் தானே?

கருணாநிதியின் கேலிச் சித்திரங்கள் :

காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்து விடவில்லை. கருணாநிதி கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சையை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர்(Kamarajar) புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே?.

மேலும் படிக்க : திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் வீழ்த்தப்பட்டார்

நடிக்காதீங்க ஸ்டாலின்! :

இவரே வெடிகுண்டு வைப்பாராம்.. இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! என்பதை போல, நடிக்காதீங்க ஸ்டாலின்! அவதூறான பேச்சை(Trichy Siva Speech About Kamarajar) திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று! ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன். ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது. வாழ்க கர்மவீரரின் புகழ்.” என எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami) குறிப்பிட்டுள்ளார்.

======

.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in