

வேளாண் பட்ஜெட் - அதிமுக விமர்சனம்
தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம்
தவெக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. இரண்டரை மணி நேர வேளாண் பட்ஜெட் உரையில் முக்கிய திட்டம் ஒன்றுகூட இல்லை.
20 துறை வாரியாக திமுக அறிவித்த வேளாண் பட்ஜெட்டைப் போலவே தவெகவும் ஸ்டிக்கர் ஒட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறவில்லை
விவசாயிகளுக்கு விஜய் அளித்த வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இனிக்க, இனிக்க அறிவிப்புகள், திட்டங்கள் எங்கே?
நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்படவில்லை. தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க அறிவிப்பு கொடுத்துவிட்டு விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றியுள்ளது.
பயிரக்கடன் தள்ளுபடி இல்லை
தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கான பயிர்க்கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்யவில்லை. தவெகவின் வேளாண் பட்ஜெட் மீது விவசாயிகள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
10,000 தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு?
விவசாய குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? விவசாயிகளிடம் இருந்து உடனே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் இது; வேளாண் பட்ஜெட் எனும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
காவிரி விவகாரம் - பதில் சொல்லுங்க
தார்ப்பாய் கொடுப்பேன் என்கிறார்கள். அதையாவது ஒழுங்காக செய்யுங்கள். காவிரி விவகாரத்தில் முதல்வர் வாய் திறந்து பேசுவதில்லை.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குத் தலைகுனிவு ஏற்படும் வகையில் முதல்வர் நடந்துகொண்டது வருத்தமளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
=======================