
Edappadi Palanisamy on Custody Deaths : இதுகுறித்து, தனது எக்ஸ்(X) பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ்நாட்டில் நடைபெற்ற காவல் வன்முறை, லாக்கப் மரணங்கள், நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசின் செயல் ஆகியவற்றை சாடியுள்ளார்.
காவல்நிலைய மரணம் : நீதிமன்றம் உத்தரவு
2024ம் ஆண்டு மார்ச் மாதம் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன்(Sankarankovil Murugan Death) என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவி மீனா மூன்று குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை, மீனாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தெளிவான உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு :
ஆனால் இதுவரை அந்த உத்தரவை திமுக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் மீனாவுக்கு எந்த அரசு வேலைவோ அல்லது இழப்பீடோ வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. தனது கணவனை இழந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண், இன்று 300 ரூபாய் கூலிக்கு வேலை செய்து வாழ்கின்றார். பொம்மை முதல்வரே! மீனாவுக்கு உங்களிடம் இருந்து பதில் வர போகிறதா?”.
அஜித்குமார் குடும்பத்தினர் அதிருப்தி :
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல் நிலைய எல்லைக்குள் காவலர் அஜித்குமார் மரணம்(Ajith Kumar Death) அடைந்த சம்பவம் தொடர்பாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். அஜித்குமார் குடும்பத்தாருக்கு அரசு அவசரமாக வழங்கிய வேலை மற்றும் நிலம் அவர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும், அவர்களே இதை எதிர்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடப்பது மக்கள் விரோத ஆட்சி :
லாக்கப் மரணங்களை(Custody Death) தடுக்கத் தெரியவில்லை, உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மனமில்லை, இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறு சாட்சி என்ன வேண்டும்?”
தமிழகத்தில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து ஊரக, நகரப் பகுதிகளில் பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்க, திமுக அரசு அதை அலட்சியமாக எதிர்கொள்கிறது. 2026ல் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள், அது நடந்தே தீரும் “ இவ்வாறு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy) தெரிவித்துள்ளார்.
===