உங்களுடன் ஸ்டாலின் அல்ல, பொய்களுடன் ஸ்டாலின் : ஜெயக்குமார் விளாசல்

ADMK Jayakumar Criticized CM MK Stalin : உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு ” பொய்களுடன் ஸ்டாலின்”, எனப் பெயர் வைத்திருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ADMK Jayakumar Criticized CM MK Stalin On Ungaludan Stalin Scheme
ADMK Jayakumar Criticized CM MK Stalin On Ungaludan Stalin Scheme
1 min read

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் :

ADMK Jayakumar Criticized CM MK Stalin : சட்டசபை தேர்தலுக்கு 8 மாதங்களை உள்ள நிலையில், வெற்றிக்கான வியூகங்களை வகுத்து அதை செயல்படுத்தி வருகிறது திமுக. அந்தவகையில், "உங்களுடன் ஸ்டாலின்"(Ungaludan Stalin) திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை முதல்வர் ஸ்டாலின், சிதம்பரத்தில் துவக்கி வைத்திருக்கிறார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் மனுக்கள் எங்கே போயின? :

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்(Jayakumar Press Meet), “ தேர்தல் வந்தால்தான் முதலமைச்சரின் கண்களுக்கு மக்கள் தெரிகின்றனர். எதிர்க்கட்சியாக இருந்த போது பெட்டி வைத்து மனுக்கள் என்னவாயின? அதற்கான சாவி அவரிடம்தான் இருக்கிறது? முதல்வரான பின்பு மனுக்களை நானே படித்து நடவடிக்கை எடுப்பேன் என்றார். ஆனால் நடந்தது என்ன?

முதல்வரான பின்பு பொதுமக்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்து தன்னை சந்திக்கலாம் என ஸ்டாலின் உறுதியளித்து இருந்தார். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறையாவது தலைமைச் செயலகத்தில் பொதுமக்களை அவர் சந்தித்து இருக்கிறாரா?

பொய்களுடன் ஸ்டாலின்? :

எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என்று பெயர் வைப்பதே பொருத்தமாக இருக்கும். தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை. போலீசாரின் ஆட்சியும், அதிகாரிகள் ஆட்சியும் தான் நடைபெற்று வருகிறது. அரசின் செய்தித் தொடர்பு அதிகாரிகளாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறார். இதன்மூலம் அவர்களை முதல்வர் அவமதித்து விட்டார். இந்த அதிகாரிகளை அனைவரும் இனி பிஆர்ஓ(PRO) என்றுதான் அழைப்பார்கள்.

மேலும் படிக்க : IAS Officer: அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்

தமிழகத்தில் அதிகாரிகள் ஆட்சி :

ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்பு என்ற துறை இருக்கும் போது, எதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்? தமிழ்நாட்டில் மக்களாட்சி நடைபெறவில்லை, அதிகாரிகள் ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம் .

கேரளாவை போல ‘ப’ வடிவில் மாணவர்களை உட்கார வைத்தால் கல்வியிம் தரம் உயர்ந்து விடுமா? 3,600 பள்ளிகளிள் தலைமை ஆசிரியர்களே இல்லை. பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் கூட கிடையாது” இவ்வாறு திமுக அரசை ஜெயக்குமார்(Jayakumar on DMK) கடுமையாக விமர்சித்தார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in