"தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக் கொள்ளட்டும்!" : திமுகவில் OPS, அதிமுக பதிலடி

ADMK Criticized O. Panneerselvam Join DMK : உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும் என்று, திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக விமர்சித்து இருக்கிறது.
 AIADMK is criticizing O. Panneerselvam, who joined the DMK, saying, "May Karunanidhi embrace the life of your Dharma."
AIADMK is criticizing O. Panneerselvam, who joined the DMK, saying, "May Karunanidhi embrace the life of your Dharma."google
1 min read

ஓ. பன்னீர்செல்வம் ( ஓபிஎஸ் )

ADMK Criticized O. Panneerselvam Join DMK : அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்தவர் ஓபிஎஸ் என்று அழைக்கப்படும் ஓ. பன்னீர்செல்வம். 5 முறை எம்எல்ஏ, மூன்று முறை முதல்வர் என, அதிமுகவில் நீண்ட வரலாற்றை கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், இன்று திமுகவின் அங்கமாகி விட்டார்.

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் சேர முடியாமல் தவித்து வந்த அவர், ஒருவழியாக திமுகவில் சேர்ந்து, தாய்க்கழகத்தில் இணைந்து விட்டதாக விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடியை காட்டமாக விமர்சித்துள்ள அவர், இனி ஒரு போதும் அவரால் வெற்றி பெறவே முடியாது என்றும் சீண்டியுள்ளார்.

டீக்கடை to முதல்வர் - அதிமுகவே காரணம்

திமுகவிற்கு தாவிய ஓ. பன்னீர்செல்வத்திற்கு, அதிமுக தொழில்நுட்பப்பிரிவு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளது. அந்த பதிவில், “ரோஸி டீக்கடை” நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம்.

கையெழுத்து போடும் பெரும்

அம்மா வளர்த்த இயக்கத்திற்கு A-Form, B-Form கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள்.

அதிமுகவில் இருந்த உடன்பிறப்பே!

ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்! எம்ஜிஆர் மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்!

உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்!

அதிமுக வேட்டி கட்ட முடியாத நிலை

பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் இரத்தத்தின் இரத்தமான அதிமுக தொண்டர்கள்! பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்க நடத்திய நாடகமெல்லாம் அம்பலப் பட்டு நின்றதும்,வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ?

அம்மா எல்லாம் சும்மா தானா?

இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே?!

“உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க” என திரிய வாழ்த்துகள்!

தர்ம யுத்தம் தேவையா?

இதற்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற… உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும்.

கருணாநிதியே கவ்விக் கொள்ளட்டும்

(பி.கு. : தயவு செய்து “அம்மா” புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்!) இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அதிமுக சார்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in