

கோவில் காவலர்கள் படுகொலை :
EPS on Rajapalayam Temple Guards Murder : ராஜபாளையம் அருகே கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த இரவுக் காவலர்கள் இரண்டு பேர் நேற்றிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து திருட முயற்சித்தவர்கள் இந்த படுகொலையை அரங்கேற்றி இருக்கலாம் எனத் தெரிகிறது.
கோவிலில் படுகொலை - அதிர்ச்சி செய்தி
இதுகுறித்து வலைதளத்தில் பதவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு
அதேபோல், சென்னை மாநகராட்சி 196வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
பாதுகாப்பு இல்லாத சூழல்?
கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது?
அதள பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு
பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு.
Failure மாடல் அரசு
ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான Failure மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக மாடல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று, எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
===================