
2026 சட்டமன்ற தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. யார் யாருடன் கூட்டணி, எந்தக் கூட்டணி பலம் வாய்ந்ததாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, தமிழகத்தில் காலூன்ற முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதாவது, ஆட்சியில் பாஜக பங்கு வகிக்கும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். அவரது இந்தப்பேச்சு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்ட நிலையில், இதற்கு அதிமுக எதிர்வினை ஆற்றி இருக்கிறது.
கூட்டணி ஆட்சி பற்றி விளக்கம் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், தமிழகத்தில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள், எப்போதும் ஒற்றை ஆட்சிதான் அவர்களின் தேர்வாக இருக்கும்.
எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். அவரே முதல்வராக பதவி ஏற்பார். தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி என்பதுதான் தற்போது வரை இருந்த நடைமுறை. கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்து விடுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இணைவது பற்றி காலம் தான் பதில் சொல்லும் என்றும் வைகைச் செல்வன் தெரிவித்தார்.
====