நேரு மீதான ரூ.1,020 கோடி முறைகேடு புகார்! : FIR பதிய அதிமுக வழக்கு

அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி முறைகேடு புகாரில் FIR பதியக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
AIADMK filed case in Madras High Court seeking registration of FIR in  Rs 1,020 crore scam against Minister K.N. Nehru
AIADMK filed case in Madras High Court seeking registration of FIR in Rs 1,020 crore scam against Minister K.N. Nehru
1 min read

தமிழக டிஜிபிக்கு ED கடிதம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கே.என். நேரு ரூ. 1,020 கோடி வரை ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை சார்பாக 2 முறை கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

நேரு மீதான புகார் - அதிமுக வழக்கு

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காக்கிறது. இந்தநிலையில், அமலாக்கத்துறை

தந்த புகாரை அடிப்படையாக வைத்து உடனடியாக அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சட்டத்துறை செயலாளரும், எம்பியுமான இன்பதுரை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை

அதில், ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக அமலாக்கத்துறை தெளிவாகக் கூறியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென கடந்த மாதம் 13 ஆம் தேதி புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

வழக்கு பதிந்து விசாரணை நடத்துக

எனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்து நியாயமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் இன்பதுரை கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in