ADMK to TVK : 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் MLAக்கள் தவெகவில்.. : டெல்டாவில் பின்னடைவு, அதிர்ச்சியில் அதிமுக!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் மற்றும் எம்,ஆர் விஜய்பாஸ்கர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்
AIADMK to TVK: 4 former ministers and 7 former MLAs defect; AIADMK in shock as it takes a hit in the Delta region.
AIADMK to TVK: 4 former ministers and 7 former MLAs defect; AIADMK in shock as it takes a hit in the Delta region. google
1 min read

அதிமுக டூ தவெக

அதிமுக சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்..

தவெகவில் இணைந்த முக்கிய தலைவர்கள்

அந்த வகையில் அதிமுகவில் முக்கிய முகமாக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி மற்றும் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் த.வெ.க-வில் இணைந்துள்ளனர்

சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாவது

“தலைமையில் இருக்கக்கூடிய ஒருவரின் தவறான, சுயநலமான முடிவின் காரணமாகத்தான், இன்று மாமல்லபுரத்தில் கடல்போல் மக்கள் திரண்டிருக்கிறார்கள்.

இந்த எழுச்சியைப் பார்த்தால் அதிமுகவில் இருந்து ஒட்டுமொத்த டெல்டாவே காலியாகும் நிலைமைதான் இப்போது இருந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் சி .விஜயபாஸ்கர்

எடப்பாடிக்கு நேரடி சவால்

தமிழகத்தின் வளமான எதிர்காலத்திற்குப் புதிய திசையை உருவாக்கி வரும் தவெக தலைவர் விஜய் அவர்களின் தலைமையில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்!” என்று எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு நேரடியாகவே சவால் விடுத்திருக்கிறார் விஜயபாஸ்கர்

அதிருப்தியில் அதிமுக

தொடர்ந்து அதிமுகவில் இருந்த முக்கிய அமைச்சர்கள் தவெக இணைந்துள்ளது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தியை அதிகரிக்க செய்துள்ளது. தவெகவில் சி,விஜயபாஸ்கரை இணைந்துக் கொண்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

===========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in