அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு ‘போர்வாள்’ : எடப்பாடிக்கு ஆதரவாக செய்திகள் வெளியீடு : விரைவில் டிவி சேனல்....

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக `போர்வாள்’ என்னும் நாளிதழை அக்கட்சியின் பொதுசெயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்,
AIADMK's official newspaper 'Porvaal' - EPS launch, it seems that news will be published in support of Edapadi
AIADMK's official newspaper 'Porvaal' - EPS launch, it seems that news will be published in support of Edapadi google
1 min read

அதிமுகா-வின் அதிகாரப்பூர்வ நாளேடு வெளியீடு

போர்வாள் நாளிதழின் முதல் முன்னோட்ட நாளிதழை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அஇஅதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை முகாம் அலுவலகத்தில்

இன்று (20.5.2026 – புதன் கிழமை), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடாக `போர்வாள்’ என்னும் நாளிதழை அறிமுகம் செய்து, போர்வாள் நாளிதழின் முதல் முன்னோட்ட நாளிதழை வெளியிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் உடன் இருந்த அமைச்சர்

இந்நிகழ்வின்போது, அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம்,

அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, ஆகியோரும் உடன் இருந்தனர்

இரு பிளவில் கட்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 47 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில்

அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.,க்கள் நம்பிக்கை தீர்மானத்தின்போது தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுகவுக்குள் மீண்டுமொரு உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளது.இது கட்சியினரிடையே பதற்ற நிலையயை உருவாக்கி உள்ளது

சிவி சண்முகத்துக்கு ஆதரவாக நமது அம்மா நாளிதழ்

அதிமுகவின் நாளிதழாக இருந்தவந்த ‘நமது அம்மா’ நாளிதழ் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு வந்தநிலையில் , தற்போது எடப்பாடி புதிதாக போர்வாள் என்ற நாளிதழை வெளியிட்டுள்ளது

எடப்பாடிக்கு ஆதரவாக செய்திகள்

இந்த நாளிதழில் இபிஎஸ் அவரது தரப்பு ஆதரவு செய்திகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

நியூஸ் ஜே தொலைக்காட்சியும், சி.வி. சண்முகம், வேலுமணி கட்டுப்பாட்டில் இருப்பதால், விரைவில் டிவி சேனல் ஒன்றையும் தொடங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

=============

logo
Thamizh Alai
www.thamizhalai.in