
Sivagangai Ajith Kumar Case : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் அஜித் குமார் எனும் இளைஞர் உயிரிழந்தார். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விசாரணை என்ற பெயரில் அவரை போலீசார் அடித்த காணோளி பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக குரல் கொடுத்ததால், வேறு வழியின்றி சிபிஐக்கு வழக்கை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் :
அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை வேண்டும் என்று கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
4 வாரங்களில் விரிவான அறிக்கை :
இப்படி இருக்கையில்தான் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. தமிழக காவல்துறை டிஜிபி உரிய விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : மக்களை மிரட்டுவதை கைவிடுங்க : திமுக அரசுக்கு எடப்பாடி எச்சரிக்கை