திமுக ஆட்சி என்றால் அராஜகம்தான் : பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

​தி​முக ஆட்சி என்​றாலே அராஜகம்​தான் என்று தேமு​திக பொதுச் செய​லாளர் பிரேமலதா காட்டமாக கூறி இருக்கிறார்.
Premalatha Slams DMK Govt
Premalatha Slams DMK Govt on Ajithkumar Deathhttps://x.com/Premallatha
1 min read

சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலைக்கு நீதி கேட்டு தேமு​திக சார்​பில் திருப்​புவனத்​தில் ஆர்ப்​பாட்​டம் நடத்தப்பட்டது.

அஜித்குமாரை அடித்தே கொன்றார்கள் :

இதில் பங்கேற்று பேசிய பிரேமலதா விஜயகாந்த், ” அஜித்​கு​மாரை காவல்துறையினர் அடித்தே கொன்​றுள்​ளனர். அவரைக் கொன்​றவர்​களுக்​கும் இது​போன்ற தண்​டனை கொடுக்க வேண்​டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசா​ரிக்​க​வில்​லை. எனவே, அனைத்து உண்மைகளையும் சிபிஐ வெளிக்​கொணர வேண்​டும்.

அதிகரிக்கும் வரதட்சணை கொடுமை :

தமிழகத்​தில் கடந்த ஒரு வாரத்​தில் வரதட்​சணைக் கொடுமை​யால் 4 பெண்​கள் தற்​கொலை செய்​துள்​ளனர். போதைப் பொருட்​கள் புழக்​கம் அதி​கரித்​து​விட்​டது. போதை வழக்​கில் 2 நடிகர்​களை கைது செய்​து, இந்த விவ​காரத்தை திசை திருப்​பு​கின்றனர்.

திமுக ஆட்சி என்றால் அராஜகம்தான் :

திமுக ஆட்சி என்​றாலே அராஜக​மும், ரவுடி​யிச​மும்​தான். அனைத்து காவல் நிலை​யங்​களி​லும், கைதி​களை விசா​ரிக்​கும் இடங்​களி​லும் சிசிவிடி கேம​ராக்​களை பொருத்த வேண்​டும்.

மக்​கள் புரட்சி வெடித்​தால் காவல் துறை தாங்​காது. மது ஒழிந்​தால்​தான் தமிழகத்​துக்கு விடிவு​காலம் பிறக்​கும்” இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகிதாவுக்கு ஆதரவாக காவல்துறை? :

பின்னர், அஜித்​கு​மார் வீட்​டுக்​குச் சென்​ற பிரேமலதா விஜயகாந்த், அவரது குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரி​வித்​தார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் பேசுகையில், “நிகி​தாவுக்கு ஆதர​வாக செயல்​படும் அதி​காரி​கள் யார் என்ற விவரங்​களை வெளி​யிட வேண்​டும்.

கனிமவளக் கொள்​ளை, லஞ்சம், ஊழல், போதைப் பொருள் புழக்​கம் போன்ற பிரச்​சினை​களை திசை ​திருப்பவே ஓரணி​யில் தமிழ்​நாடு என்ற முழக்​கத்தை திமுகவினர் கையில்​ எடுத்​து இருப்பதாக​ விமர்சித்தார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in