”சாட்டையை கையில் எடுப்பாரா விஜய்!” : சென்னைக்கு படையெடுக்கும் தவெக எம்எல்ஏக்கள் : நாளை ஆலோசனை, ஆக்சன் மோடில் தலைமை..!

தவெகவினர் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நாளை எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார் முதல்வர் விஜய்.
allegations against TVK members creating pressure on govt, CM Vijay called meeting of MLAs tomorrow
allegations against TVK members creating pressure on govt, CM Vijay called meeting of MLAs tomorrowsource:thamizhalai,ai generated
2 min read

விஜய் தலைமையில் தவெக ஆட்சி

மே மாதம் முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி பொறுப்பேற்றது. 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் சில எம்எல்ஏக்களின் செயல்பாடுகள், அரசுக்கு தீவிர தலைவலியாய் மாறி இருக்கிறது.

அரசியல் களத்தில் புயல்

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து கிளம்பியுள்ள தீவிரக் குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

கடும் அதிருப்தியில் தலைமை

கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்குலைவை வெளிப்படுத்தும் வகையிலும் எழுந்துள்ள இந்த விவகாரங்களால் தலைமை கடும் அதிருப்தியடைந்துள்ளது.

தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்

இந்தநிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நாளை (நவம்பர் 11) காலை 11 மணியளவில் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அதிரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

கட்டாயம் பங்கேற்க உத்தரவு

இந்தக் கூட்டத்தில் அனைவரும் எவ்வித விலக்கும் இன்றி கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது

விஜய் நேரில் விசாரணை

அரசு இயந்திரத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 அமைச்சர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

கடும் நடவடிக்கை உறுதி

குற்றச்சாட்டுகள் உறுதியாகும் பட்சத்தில், அவர்கள் வகித்து வரும் அரசுப் பதவிகளைப் பறிக்கவும், கட்சி ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தலைமை தயங்காது என்றும் கூறப்படுகிறது.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்

மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு செல்போனில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், தவறான மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியது பூகம்பத்தை கிளப்பி உள்ளது.

அந்த அதிகாரியின் பாதுகாப்பைக் கருதி, அரசு தரப்பில் அவருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் இந்த அத்துமீறல் அரசு அதிகாரிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாவட்டத்தின் முதல் நிலை ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வால் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் முதல்வர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றன.

சர்ச்சையில் துணை சபாநாயகர்

அதேபோன்று, குடிநீர் கேட்ட வாக்காளரை தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் நேரடித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவெளியில் கார்த்திக் குமார் என்ற நபரை துணை சபாநாயகர் காலால் உதைத்தும், கன்னத்தில் அறைந்தும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதே போன்று சில அமைச்சர்களின் செயல்பாடுகள் மீதும் முதல்வர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, நாளை நடைபெறும் தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் சாட்டையை சுழற்றுவார், என்று தெரிகிறது. அதன் அடிப்படையில், நடவடிக்கைகள் பாயும் என்றும் தெரிகிறது.

===============