நயினார் நகேந்திரன், ஆளுநர் சந்திப்பு
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் ஆளுநரை சந்தித்து புகார் கடிதத்தை வழங்கி ,நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுவலியுறுத்தியுள்ளார்
தவெக மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தவெக அமைச்சர்கள் பலரின் மீது குற்றச்சாட்டுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும் நிலையில் , இந்த நிலையில் ஆளும் கட்சி தரப்பினர் மீது பல்வேறு புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரை சந்தித்து புகார் மனுவை அளித்திருக்கிறார் நயினார் நகேந்திரன்
புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது
புகார் மனுவில் ,அரசு வழக்கறிஞரை நியமிக்க ரூ.5 லட்சம் முதல் 50 லட்சம் வரை அமைச்சர் நிர்மல் குமார் லஞ்சம் கேட்பதாக புகார் வந்துள்ளது , அதற்கான தக்க நடவ்டிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறி புகார் அளித்திருக்கின்றனர்
செய்தியாளர்களிடம் பேசிய நயினார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், குழந்தைகளிடம் நடந்துகொண்ட முறை, தவெக அமைச்சரவை கூட்டத்தில் தனி நபர்களான விஷ்ணு ரெட்டியும், ஜான் ஆரோக்கியசாமியும் கலந்து கொண்டது குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் ,
தவெக ஆட்சி, அதிகரித்துள்ள குற்றம்
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 54 நாட்களில் 151 பாலியல் வன்கொடுமைகள், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகள், 80-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளன என்றும்
கடந்த கால திமுக அரசுக்கும், இப்போதைய தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதில் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து மனுவில் தெரிவித்துள்ளோம்.
நடக்கும் பல குற்றங்களில் தவெகவினரே குற்றவாளிகளாக இருக்கின்றனர் ,அனைத்திற்கும் வெள்ளை அறிக்கை வெளியிடும் தவெக அரசு,இந்த குற்றங்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்
குதிரை பேரம் குறித்து விளாசிய நயினார்
தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்னரே அமமுக எம்எல்ஏ காமராஜை குதிரை பேரம் மூலம் தங்கள் பக்கம் இணைத்தனர். தற்போதுஇ அதிமுகவில் இருந்து பல அமைச்சர்க்ள தவெகவில் இணைந்து வருகின்றனர் என்றும் சரமாரியான கேள்விகளை நயினார் எழுப்பினார்.
===================================