”முடிவுக்கு வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!” : விசிலுக்கு ’கை’ கொடுக்கும் ராகுல் : நாளை முதல்வராகும் விஜய்..

தவெகவிற்கு ஆதரவு தர காங்கிரஸ் முடிவு செய்து விட்டதாக கூறப்படுவதால், திமுகவுடனான கூட்டணி முடிவுக்கு வருகிறது.
Alliance with DMK is coming to an end, Congress has reportedly decided to support TVK Vijay
Alliance with DMK is coming to an end, Congress has reportedly decided to support TVK Vijaygoogle
1 min read

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. இரண்டு இடங்களில் போட்டியிட்ட விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்வார். அப்போது சட்டசபையில் தவெக பலம் 107 ஆக மாறும்.

11 இடங்கள் தேவை

ஒரு இடம் காலியாக 233 தொகுதிகள் என்றால், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 117 தொகுதிகள் தேவை. தவெகவில் இருந்து சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்படும் ஒருவர், வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது. எனவே, தவெகவிற்கு 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

ஜனாதிபதி ஆட்சி?

அப்படி கிடைக்கும் பட்சத்தில் தான் வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும். தோற்றால் அது குடியரசு தலைவர் ஆட்சியை நோக்கி நகர்த்த வாய்ப்பு இருக்கிறது.

ஆதரவு கோரிய விஜய்

எனவே, ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவை பெற, தவெக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆட்சியமைப்பதற்கு விஜய் ஆதரவு கோரியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் உறுதிபடுத்தி உள்ளார்.

இடதுசாரிகள், விசிக ஆதரவு?

இதேபோன்று, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆதரவையும் பெற தவெக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

காங்கிரசுக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், மற்ற மூன்று கட்சிகளுக்கும் தலா 2 எம்எல்ஏக்கள் இருப்பதால், விஜய் எதிர்பார்க்கும் 11 இடங்கள் கிடைத்து விடும்.

எனவே, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலக இருப்பது உறுதியாகி உள்ளது.

ஆளுநரை சந்திக்கும் விஜய்

இந்தநிலையில், இன்று ஆளுநரை சந்திக்கும் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். இதையடுத்து நாளை அவர் முதல்வராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், பதவியேற்பு விழா நடைபெறும்.

ராகுல் கனவு பலித்தது

தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி விரும்பினார். அப்போது அது கை கூடாமல் போனாலும், தேர்தலுக்கு பிறகு அது கனிந்து இருக்கிறது.

===============

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in