

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
AMMK General Secretary Dhinakaran has announced that he will not contest the Tamil Nadu Assembly elections : எடப்பாடி பழனிசாமி கைகளுக்கு அதிமுகவின் முழு அதிகாரம் வந்த பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார் டிடிவி. தினகரன். கடந்த சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டாலும், வெற்றி என்பது கிடைக்கவில்லை.
முதலில் எதிர்ப்பு, இப்போது ஆதரவு
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த தினகரன், திடீரென மனம் மாறி, என்டிஏ கூட்டணியில் இணைந்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் மேடையிலேயே எடப்பாடியை அவர் பாராட்டினார்.
எடப்பாடி vs தினகரன்
பங்காளி சண்டை தான், எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தினகரன் கூற, இனி ஒற்றுமையாக இருப்போம் எனப் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார் எடப்பாடி. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி, அதாவது அதிமுக கூட்டணி சார்பில் அமமுகவும் போட்டியிடுகிறது.
தேர்தலில் போட்டியிட போவதில்லை
இந்நிலைலையில், தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “வரும் சட்டமன்றத் தேர்தலில், “நான் போட்டியிடப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
என்னுடையவர்களை அமைச்சராக்குவேன்
அவர்களை அமைச்சராகப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது; ஆனால் அதற்காக அழுத்தம் தர மாட்டேன்” என்று தெரிவித்தார்.
ஓ. பன்னீர்செல்வமும் கூட்டணி குறித்து நல்ல முடிவை எடுப்பார் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
ஊழலை ஒழிப்பாரா விஜய்?
மேலும் விஜய் குறித்து பேசுகையில், “ஊழலை ஒழிப்போம் என்று பேசும் விஜய், அவரது டிக்கெட் பிளாக்கில் விற்பதைத் தடுக்க முடியவில்லை.
எம்ஜிஆர் படத்தை வைத்துக்கொண்டு அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் எப்படிக் கூறலாம்?” என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார்.
தினகரன் திட்டம் என்ன?
தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தினகரன் அறிவித்து இருப்பதால், அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார் எனத் தெரிகிறது.
எடப்பாடிக்கு நெருக்கடி
அதேசமயம், தன்னுடன் இருப்பவர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்து அமைச்சராக்குவேன் எனக் கூறுவது, அதிமுகவுக்கு நெருக்கடி தரும் பதிலாக பார்க்கப்படுகிறது.
=======================