போனமுறை தோல்வி, இந்த முறை இணைந்திருக்கிறோம் : டிடிவி தினகரன்!

TTV Dhinakaran about ADMK : இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என ஒன்றாக இணைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
AMMK Leader TTV Dhinakaran Press Meet Today Says about Reunite for Wins TN Election 2026 against DMK Read Story in Tamil
AMMK Leader TTV Dhinakaran Press Meet Today Says about Reunite for Wins TN Election 2026 against DMK Read Story in Tamilgoogle
1 min read

டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு

TTV Dhinakaran Press Meet about ADMK Alliance : சென்னை மெரீனாவில் அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன், "திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்.

அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்

தவெக தலைவர் விஜய், அதிமுக தலைவர்களான எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் ரோல் மாடல் என்று கூறிக்கொள்கிறார். ஆனால், அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிக்கிறார். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்தான் செங்கோட்டையன், என்று பேசினார்.

குழப்பம் விளைவிக்க நினைத்தாலும் நடக்காது

இதைத்தொடர்ந்து பேசிய அவர், விஜய் எங்களது எதிரி அல்ல, எங்களுடைய ஒரே எதிரி திமுகதான். திமுகவை வீழ்த்தவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.

கனிமொழி தில்லி சென்று வந்தால் அமைதியாக இருக்கிறீர்கள், நானோ, ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் தில்லி சென்று வந்தால் அழுத்தம் என்கிறீர்கள், தில்லிதான் உங்கள் கட்சி தலைமையா? என்று கேட்கிறீர்கள்.

திமுகவை வீழ்த்த இணைந்துள்ளோம்

திமுகவை வீழ்த்த வேண்டும், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.

ஓபிஎஸ் என்னுடைய அண்ணன்தான். செங்கோட்டையன் உள்ளிட்டோர் மற்ற கட்சிகளுக்கு சென்றது வருத்தம் இருக்கிறது.

கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்திருக்கிறோம்

ஆனால், தனிநபர்கள் சென்று ஒரு இயக்கத்தை பாதிக்க முடியாது. நாங்கள் பிரிந்திருந்ததால் போன முறை தோல்வியுற்றோம்.

அதனை உணர்ந்ததால் இந்த முறை இணைந்திருக்கிறோம். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்திருக்கிறோம்.

என்ன குழப்பம் விளைவிக்க நினைத்தாலும் ஒன்றும் நடக்காது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in