

An additional charge of Rs.10 on TASMAC liquor bottles: Order issued to include this in the fixed retail price!
தமிழகத்தில் டாஸ்மாக் காலி பாட்டில் வைப்புத் தொகை ரூ.10 வரும் நவம்பர் 1 முதல் MRP விலையிலேயே சேர்த்து விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு.
காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்
தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
இதற்காக நுகர்வோரிடம் ரூ.10 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டு, காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் போது அந்த ரூ.10 தொகையை நுகர்வோர் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.
நிர்ணய விலையுடன் (MRP) சேர்ப்பு
காலி மது பாட்டில்களுக்காக தனியாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.10 கட்டணம், வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மதுபானத்தின் நிர்ணய விலையுடனேயே சேர்த்து விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனைத்து வகை மதுபானங்கள்
இதன் மூலம் அனைத்து வகையான மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையிலேயே இந்த ரூ.10 சேர்க்கப்படுகிறது.
அறிவிப்புப் பலகை கட்டாயம்
சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் தொடர்பான விழிப்புணர்வு அறிவிப்பை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நுகர்வோர் பார்க்கும் வண்ணம் அறிவிப்புப் பலகையாக வைக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: “அடுத்த ரவுண்டுக்கு தயார்” : வங்கக் கடலில் வலுவடையும் தாழ்வுப்பகுதி : நவ.1, 2ல் மீண்டும் கனமழை : வானிலை அப்டேட்..!
===============