

4ல் போட்டி, 2ல் வெற்றி
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுக 4 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது.
சீர்காழியில் செந்தில் செல்வன், கடையநல்லூரில் திமு ராஜேந்திரன் வெற்றி பெற்றனர்.
தவெக ஆட்சி
தேர்தலில் திமுக தோற்று ஆட்சியை இழக்க, தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு முதல் அமைச்சரானார் விஜய்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால், மதிமுகவால் தவெகவிற்கு ஆதரவு கொடுக்க இயலவில்லை.
மதிமுக நிலைப்பாட்டில் மாற்றம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் முதல்வர் விஜய் சந்தித்த பிறகு, மதிமுகவின் பேச்சில் மாற்றம் தென்பட்டது.
தவெகவை ஆதரிக்கும் வைகோ
முதல்வர் விஜய் மற்றும் தவெக ஆட்சிக்கு ஆதரவான கருத்துகளை வைகோவும், துரை வைகோவும் தெரிவித்து வருகின்றனர். மதிமுக வெளியேறலாம் என்று திமுகவின் ஆ. ராசா பேச்சு இதற்கு வலுச்சேர்த்தது.
27ல் மதிமுக பொதுக்குழு
இந்தநிலையில், திமுக கூட்டணியில் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளை ஜூன் 27-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மதிமுக எம்எல்ஏ வரவில்லை
அதற்கு முன்னதாக இன்று உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதிமுக எம்எல்ஏ சீர்காழி செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை.
திமுகவில் நீடிப்பா?
இது தொடர்பாக செந்தில் செல்வன் எம்.எல்.ஏ. கூறுகையில், சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் மதிமுகவில் இருந்து விலகி திமுகவின் உறுப்பினராக சேர்ந்தேன்.
மதிமுக தரப்பு விளக்கம்
தற்போதைய நிலையில் திமுக உறுப்பினராக திமுகவின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். அத்துடன் மதிமுகவின் உயர்நிலை குழு உறுப்பினராகவும் இல்லை. அதனால் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார்.
அவர் மதிமுகவில் இருந்து விலகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
செந்தில் செல்வன் எம்எல்ஏ உயர்நிலை குழு உறுப்பினர் இல்லை என்பதால் மதிமுக கூட்டத்தில் பங்கேற்கவில்லை” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னோரு எம்எல்ஏ பங்கேற்பு
அதே நேரத்தில், மதிமுகவின் மற்றொரு எம்.எல்.ஏ.வான கடையநல்லூர் ராஜேந்திரன், உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
ராஜேந்திரனும் மதிமுகவில் இருந்து விலகி திமுகவின் அடிப்படை உறுப்பினராகி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவர் மட்டும் எப்படி மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்றார் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
நாளை முடிவு அறிவிப்பு
மதிமுக பொதுக்குழு முடிந்ததும் நாளை பிற்பகல் முடிவை அறிவிக்க இருக்கிறார் வைகோ. செந்தில் செல்வன் திமுகவிற்கு சென்று விட்டால், ஒரு எம்எல்ஏ மட்டுமே பதவி விலகுவார். அது வைகோவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று தெரிகிறது.
===============