

திருப்பூர் சட்டமன்ற தொகுதி
தமிழக சட்டமன்ற தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியின் முடிவு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
இந்தத் தொகுதியில் 1.66 லட்சம் வாக்குகளில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பெரியகருப்பனை வீழ்த்தி, ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கின் வலிமையை உலகுக்கு எடுத்துக் காட்டி இருக்கிறார்.
திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
1977க்கு பிறகு திமுக அல்லது அதிமுகவே தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வந்த நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் மாற்றாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றியடைந்திருக்கிறது.
35.5 சதவீத வாக்குகளுடன் தவெக
அதேபோல, முதல் தேர்தலிலேயே அதிக வாக்கு சதவீதத்தை பெற்றக் கட்சியாக எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக 33.5 சதவீதத்துடன் இருந்து வந்த சூழலில், விஜயின் தவெக சுமார் 35 சதவீத வாக்குகளை பெற்று அதை முறியடித்திருக்கிறது.
1 வாக்கில் தேர்தல் முடிவு
திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் திமுக வேட்பாளர் பெரியகருப்பனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் 83,364 வாக்குகளை பெற்றநிலையில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு கூடுதலாக பெற்று வெற்றியை தன்பக்கம் மாற்றினார்.
108 தொகுதிகளில் தவெக வெற்றி
அதுவரை 107 தொகுதிகளில் மட்டுமே தவெக வெல்லும் நிலை இருந்தநிலையில், 1 வாக்கில் வென்று தவெகவின் வெற்றி எண்ணிக்கையை 108ஆக சீனிவாச சேதுபதி மாற்றினார்.
தேர்தல் ஆச்சரியங்கள்
இதை சமூக வலைதளத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ”பல்வேறு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் பல ஆச்சரியங்களைத் தந்தாலும், இந்தப் புகைப்படம் தான் எனது நினைவில் நீங்காமல் நிற்கும்.
1 வாக்கால் மாறிய வரலாறு
1.66 லட்சம் வாக்குகள் பதிவாகியும், வெறும் ஒரே ஒரு வாக்கால் வரலாறு மாறியுள்ளது. 'தனி ஒருவரின் வாக்கு' எவ்வளவு வலிமையானது என்பதை உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் இந்த ஒரு புகைப்படத்தைக் காண்பித்து குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
===================