தீபாவளி வரை ஜாமின் இல்லை..10 ஆம் தேதி தான் தீர்ப்பு:தனியார் பள்ளி அங்கீகார வழக்கில் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட் உத்தரவு!

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் கைதான அன்பில் மகேஷின் ஜாமின் மனு மீது நவம்பர் 10-ல் தீர்ப்பு வழங்க உள்ளதால் தீபாவளியை சிறையில் கழிக்கும் நிலை.
Anbil Mahesh Scam Case Bail Petition Verdict Order Reserved
Anbil Mahesh Scam Case Bail Petition Verdict Order Reservedsource: google
1 min read

Anbil Mahesh Scam Case Bail Petition Verdict Order Reserved

வழக்கின் பின்னணி மற்றும் காவல் விசாரணை

திமுக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த ஆட்சி காலத்தின் போது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி வரையில் முறைகேடாக பணம் பெற்றதாக கைது செய்யப்பட்டார்.

அதன்படி கடந்த 2-ஆம் தேதி முதல் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, அன்பில் மகேஷை 3 நாட்கள் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் காவல் விசாரணை முடிந்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்திய மூர்த்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்பில் மகேஷ் தரப்பு வக்கீலின் வாதங்கள்

இதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஷின் ஜாமின் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் சில முக்கிய வாதங்களை முன்வைத்தார்.

சம்மனை ஏற்று 8 மணி நேர விசாரணைக்கும், 3 நாள் காவல்துறையினரின் காவலுக்கும் அன்பில் மகேஷ் முழு ஒத்துழைப்பு வழங்கி தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

தவறான குற்றச்சாட்டு

அரசுக்குமார் என்பவர் தான் ரூ. 100 கோடி வசூலித்துள்ளார். அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டும் எனப் பொய் சொல்லி அவரே பணத்தைப் பெற்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கான அங்கீகார அரசாணையில் அன்பில் மகேஷ் கையெழுத்திடவில்லை; அது கூட்டாக எடுக்கப்பட்ட முடிவு.

ஆதாரங்களை கலைக்கமாட்டார்

அன்பில் மகேஷ் எங்கும் தப்பி செல்லமாட்டார், சாட்சியங்களையோ ஆதாரங்களையோ கலைக்கமாட்டார் என்பதால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்.

காவல்துறை தரப்பு வாதங்கள்

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜாமின் வழங்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்படி காவலில் எடுத்து விசாரித்ததில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அன்பில் மகேஷ் வீட்டிற்குப் பணத்தை எடுத்துச் சென்ற சரவணன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் தொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்று உள்ளது.

ஜாமின் வழங்கக்கூடாது

ஜாமின் வழங்கினால் விசாரணை கடுமையாகப் பாதிக்கப்படும். புதிய பி.என்.எஸ். சட்டப்படி 60 நாட்கள் வரை காவலில் எடுத்து விசாரிக்க முடியும் என்பதால் ஜாமின் மனுவை நிராகரிக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீபாவளி வரை ஜாமின் இல்லை, அன்பில் மகேஷின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை வரும் நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதன் காரணமாக, வரும் தீபாவளிப் பண்டிகையன்று அன்பில் மகேஷ் புழல் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

============