

மேகேதாட்டு அணை
மேகேதாட்டுவில் கர்தாடகா அணை கட்ட முயற்சி எடுத்து வருவது இருமாநில அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா, தமிழகத்தில் அதிமுக, பாமக கூட்டணியில் இடம்பெற்று இருக்கிறது.
தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு
இரண்டு மாநிலங்களிலும் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு என்பது வேறுவிதமாக இருக்கிறது. கர்நாடகாவில் அணைக்கு ஆதரவு, தமிழகத்தில் அணைக்கு எதிர்ப்பு என்ற நிலையில் தான் பாஜக, பாரதிய ஜனதா கட்சிகள் செயல்படுகின்றன.
காங்கிரஸ் - பாமக மோதல்
காங்கிரசும் பாமகவும். வார்த்தை போர் அரசியலில் ஈடுபட்டு வருவது கவனம் பெற்றுள்ளது.
பாமகவிற்கு காங்கிரஸ் சவால்
மேகேதாட்டு விவகாரத்தில் பாமக என்டிஏவில் இருந்து விலகி எதிர்ப்பு தெரிவிக்குமா என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சவால் விடுத்து இருந்தார்.
நாடகமாடும் காங்கிரஸ் - அன்புமணி
மகாபலிபுரத்தில் நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் அன்புமணி, “புதிதாய் தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் பேசி வருகிறார். நாங்கள் தனித்து நின்று சட்டமன்ற உறுப்பினர்களாகவே வென்றிருக்கிறோம்.
உங்களால் (காங்கிரஸ்) தனித்து நின்று கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாது. கர்நாடகா காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே. சிவகுமார், குழந்தையை கிள்ளி விடுவதும், இங்கிருக்கும் காங்கிரஸ் தொட்டிலை ஆட்டுவதுமாக நாடகம் நடத்திவருகிறார்கள்” என பேசியிருந்தார்.
அன்புமணிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “அன்புமணியின் பேச்சை கேட்டேன், மிகவும் சிரிப்பாக இருந்தது. நீங்கள் (அன்புமணி) கேட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர், “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடிடம் அனுமதி பெற வேண்டாம்” என பதில் கொடுத்துள்ளார்.
இதனை எதிர்த்து, பாஜகவுக்கு நீங்கள் வழங்கி வரும் ஆதரவை (ஒரே ஒரு எம்.பி) திரும்ப பெறுவீர்களா என்பதுதான் என் கேள்வி.
மேகேதாட்டுவை ராகுல் எதிர்ப்பாரா?
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, “ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என ஒரு வார்த்தை சொல்வாரா? அப்படி ராகுல் காந்தி சொன்னால், நாங்கள் NDA-வில் இருந்து விலகுகிறோம்" என பதில் சவால் விடுத்தார்.
======