”கல்வித்துறையை சீரழித்தது தான் சாதனை” : திமுக அரசை சாடிய அன்புமணி

Anbumani Ramadoss Slams DMK Government : தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 25% இடங்கள் நிரம்பாமல் இருப்பது, திமுக அரசின் சாதனையா என அன்புமணி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Anbumani Ramadoss Slams DMK Government on TN Education in Tamil
Anbumani Ramadoss Slams DMK Government on TN Education in Tamil
1 min read

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை :

Anbumani Ramadoss Slams DMK Government : இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில்(Govt Arts College), ஜூன் மாதம் நிறைவடைய வேண்டிய மாணவர் சேர்க்கை, செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

25 சதவீத இடங்கள் காலியாக உள்ளன :

அதில், நான்கில் ஒரு பங்கு இடங்கள் நிரம்பாமல் காலியாக கிடக்கின்றன. தனியார் கல்லுாரிகளில் போட்டி போட்டு சேரும் மாணவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர விருப்பம் காட்டவில்லை.

மாணவர் சேர்க்கை நீட்டிப்பு :

தமிழகத்தில் மொத்த கல்லுாரிகள் எண்ணிக்கை, 180 ஆக உள்ளது. இவற்றில், 1.26 லட்சம் மாணவ, மாணவியர் சேர்க்கை இடங்கள் உள்ளன. ஜூன் மாதமே சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்த நிலையில், இடங்கள் நிரம்பாததால், செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

30,000 இடங்கள் காலி :

இதுவரை, 76.2 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதனால், அரசு கல்லுாரிகளில்(Govt Arts College Admission) மீதமுள்ள 30,000 இடங்கள் நிரம்ப வாய்ப்பே இல்லை. தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 25 சதவீத இடங்கள் நிரம்பாமல் இருப்பது, இதுவே முதல்முறை.

மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது :

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழக அரசு கலைக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை(Student Admission in Govt Arts College) ஆண்டுதோறும் குறைந்து வருவதை புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன. உயர் கல்வி நிறுவனங்களை காப்பாற்ற வேண்டுமானால், திமுக அரசை அகற்றிவிட்டு, உயர்கல்வி மீது அக்கறை கொண்ட அரசை அமைக்க வேண்டும்.

மேலும் படிக்க : Anbumani : ”திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லை” : அன்புமணி ஆவேசம்

முதல்வர் பொய் கூறுகிறார்:

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளில், 364 செயல்பாட்டில் இருக்கின்றன. இன்னும், 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. 'மொத்தம் 404 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என, மீண்டும் ஒரு பொய்யை முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். மீண்டும் மீண்டும் பொய்களை கூறி மக்களை ஏமாற்ற திமுக முயல்வது கண்டிக்கத்தக்கது'” என அந்த அறிக்கையில் அன்புமணி எச்சரித்துள்ளார்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in