சாதிவாரி கணக்கெடுப்பு மூலமே ”சமூகநீதி” : அன்புமணி திட்டவட்டம்

Anbumani on Caste Wise Population in Tamil Nadu : தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே, அனைவருக்கும் சமூகநீதி கிடைக்கும் என்று அன்புமணி தெரிவித்து இருக்கிறார்.
Anbumani said that only caste-based census conducted in Tamil Nadu, social justice  achieve for everyone
Anbumani said that only caste-based census conducted in Tamil Nadu, social justice achieve for everyonePattali Makkal Katchi
1 min read

பாமக தலைமையில் ஆர்ப்பாட்டம்

Anbumani on Caste Wise Population in Tamil Nadu : தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுக, தவெக பங்கேற்கவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு - வலியுறுத்தல்

பாஜக சார்பில் கரு நாகராஜன், புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு - சமூக பிரச்சினை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ” சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு சமூகநீதிப் பிரச்சினை. இதன் மூலம் இடஒதுக்கீடு வரும் சாதியை வைத்துதான் நூறாண்டுகளாக அடக்குமுறை நடந்தது. அதை சரிசெய்ய வேண்டும்.

திமுக பொய் சொல்கிறது

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்பது பொய். இப்போது எல்லாமே விரல் நுனியில் இருக்கிறது. ஒரு பழைய கணக்கை வைத்துக் கொண்டுதான் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது டிவி கூட கிடையாது.

பழைய கணக்கு தான் ஒடுகிறது

பிள்ளைகளுக்கு படிப்பு, வேலை, கடன், சுயவேலை கொடுப்பதற்காக பழைய கணக்கெடுப்பை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறோம். புதிய கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். இந்த சமூகங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சமூகங்களும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் தான் நீங்கள் சமூகநீதியை நிலைநாட்ட முடியும்.

சமூகநீதியை எப்படி நிலைநாட்டுவது?

இல்லையெனில் எதை வைத்து நீங்கள் சமூகநிதியை நிலைநாட்டுவீர்கள். இதில் பல காரணங்கள் இருக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு எடுப்பார்கள்.

மத்திய அரசுக்கு பாமக அழுத்தம்

எங்களது அழுத்தம் காரணமாக பிரதமர் மோடியிடம் பல முறை அழுத்தம் கொடுத்த நிலையில், 2027 இல் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

1931க்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு

1931க்குப் பிறகு முதல்முறையாக இந்திய அளவிலே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகின்ற அரசு இப்போது இருக்கும் அரசு. இதற்காக 14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அதில் மாற்றம் கிடையாது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி தேவை

சாதிவாரி கணக்கெடுக்கெடுப்பு ஒரு சமூகநீதிப் பிரச்சனை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டும் என்றுதான் சாதிவாரி கணக்கெடுப்பு கோருகிறோம்” இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in