

மேகேதாட்டு அணை - தமிழகம் எதிர்ப்பு
தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய நீர்வள ஆதாரமாக இருப்பது காவிரி நீர். தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது.
தமிழக அரசு சட்டப் போராட்டம்
இதன்காரணமாக தமிழகத்தில் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலையானது உருவாகும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறுது.
தமிழக அரசியல் அரசியல் கட்சிகளும் மேகதாது அணைக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
அன்புமணி விழிப்புணர்வு பயணம்
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மேகேதாட்டு அணை திட்டத்தை தடுக்க வலியுறுத்தி பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.
காவிரியின் வரலாறு
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், 25 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு திகழ்கிறது. அதன் குறுக்கே, 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள மேகேதாட்டு அணையை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது.
அந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு நீர் வருவது தடுக்கப்பட்டு, காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்.
குடகு மலையில் உருவாகும் காவிரி கர்நாடகத்தில் 320 கி.மீ தூரமும், தமிழகத்தில் 416 கி.மீ தூரமும் பாய்ந்து, வங்கக் கடலில் கலக்கிறது.
கர்நாடகாவின் புதிய அணை திட்டம்
தமிழகத்திற்குள் நுழைவதற்கு 4 கிலோ மீட்டருக்கு முன்பாக மேகேதாட்டு என்ற இடத்தில், காவிரியும், அதன் துணை ஆறான அக்ராவதி ஆறும் கலக்கும் இடத்தில் 325 அடி (99 மீட்டர்) உயரத்தில், 2411 அடி (735 மீட்டர்) அகலத்தில் கான்க்ரீட் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தில் ஏற்கனவே உள்ள 4 அணைகள் மூலம் 114.57 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வமின்றி ஏரி போன்ற நீர்நிலைகளில் சேமிக்கப்படும் நீரின் அளவு 30 டி.எம்.சி.
மேகேதாட்டு அணையும் கட்டப்பட்டால் மொத்தக் கொள்ளளவு 214.57 டி.எம்.சியாக அதிகரிக்கும்
இந்த அளவு தண்ணீர் சேகரிக்கப்பட்டால், தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காது. டெல்டா மாவட்டங்களில் பாசனம் என்பதே இல்லாமல் போகும்.
தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழாக சென்று விடும். இதனால் காவிரி டெல்டா பாலைவனமாகி விடும்.
காவிரி பாயும் மாவட்டங்கள் தவிர சென்னை, காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் வெற்றிப் போகும்.
===========================