Anna University announces hike in scholarship for Ph.D. students of Rs 50, 000
Anna University announces hike in scholarship for Ph.D. students of Rs 50, 000 google

Ph.D. பயிலும் மாணவர்களின் உதவித்தொகை ரூ. 50,000 ஆக உயர்வு : அண்ணா பல்கலைக்கழகம்!

Anna University hike scholarship for Ph.D. students : அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கி வரும் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்போவதாக அறிவித்துள்ளது
Published on

அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை

Anna University hike scholarship for Ph.D. students : அண்ணா பல்கலைக்கழகத்தில் 2026 - 2027 கல்வி ஆண்டிற்கான பி.எச்.டி முனைவர் பட்ட ஆய்வாளர் படிப்பிற்கு படிக்கும் முழு நேர மாணவர்களுக்கு, அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊக்கத்தொகை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் (CEG, ACT, MIT, SAP) Ph.D. பயிலும் மாணவர்களுக்கான மாத ஊக்கத்தொகை ரூ.25,000-லிருந்து ரூ.50,000 மாக உயரத்தப்படும் என பல்கலைக்கழகம் புதிய ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது

விண்ணப்பிக்க இறுதி தேதி

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையானது தொடங்கி இருக்கிறது . பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 150 இடங்களும், அரசு மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தலா 50 இடங்களும் என 250 பி.எச்.டி மாணவர்கள் என இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த ஊக்கத்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி படிப்புகளில் சேர ஆர்வமுள்ளவர்கள் மார்ச் 28ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது

அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதற்கான அதிகாரபூர்வ இணையதளமான cfr.annauniv.edu இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளது

logo
Thamizh Alai
www.thamizhalai.in