நான்கு ஆண்டுகளில் சாதனைகள் என்ன? : திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

மத்​திய அரசு மீது பழி​போ​டா​மல் தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் திமுக செய்த சாதனை​களை பட்​டியலிட வேண்டும் என்று அண்​ணா​மலை கேட்டுக் கொண்டுள்ளார்.
Annamalai  asked DMK to list out his Government Achievements in the last 4 years i
Annamalai asked DMK to list out his Government Achievements in the last 4 years in Tamil Nadu
1 min read

பிரதமரின் வருகையால் மாற்றம் :

சென்னை விமான நிலை​யத்​தில் செய்தியாளர்​களிடம் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்​ணா​மலை, ”கங்கை கொண்ட சோழபுரம் என்ற சிறிய ஊரின் தலை​யெழுத்​தை, பிரதமரின் வருகை நிச்​சய​மாக மாற்​றும். பிரதமரின் வரு​கைக்கு பிறகு நிறைய சுற்​றுலா பயணி​கள், ஆன்​மிக​வா​தி​கள் ஏராளமானோர் வருகை தரு​வார்​கள். பிரதமரை சந்​திப்ப​தற்​காக ஓ.பன்​னீர்​செல்​வம் அனு​மதி கேட்​டிருந்​தாரா என்​பது எனக்கு தெரி​யாது.

பாஜகவுக்கு நிறைய வேலை இருக்கிறது :

கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு பணியை நடத்​த வேண்​டும். விவ​சாய கடன் வழங்​குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்​ப​தில் இருந்து விவ​சா​யிகளுக்கு விலக்கு அளிப்​பது தொடர்​பாக மத்​திய அரசு பரிசீலித்து வரு​கிறது. பாஜக தேசிய தலை​வரை தேர்ந்​தெடுக்க வேண்​டும். தமிழகத்​தில் மாநில பொறுப்​பாளர்​கள் இன்​னும் முழு​மை​யாக தேர்வு செய்​யப்​பட​வில்​லை. அகில இந்​திய அளவில் மாநில தலை​வர்​கள் மட்​டும்​தான் நியமிக்​கப்​பட்​டிருக்​கின்​றனர்.

பொறுப்பே விட கட்சியே முக்கியம் :

இன்​னும் நிறைய வேலைகள் இருக்​கின்றன. நாங்​கள் அனை​வரும் சாதாரண தொண்​டர்​கள். பொறுப்பு கிடைத்​தா​லும், கிடைக்​க​வில்லை என்​றாலும், எப்​போதும் போல தான் வேலை செய்​வோம். பொறுப்பு

என்​பது நிலை​யில்​லாதது. மாறிக்​கொண்டே இருக்​கும். பொறுப்​புக்​காக எங்​கள் வேலையை குறைத்​துக் கொண்​டோம், வேலை செய்ய மாட்​டோம் என்ற பேச்​சுக்கே இடமில்​லை. கட்சி எனக்கு இன்​னொரு பொறுப்பு கொடுத்து வேலை செய்ய சொன்னால் நான் செய்​வேன்.

நான்கு சாதனைகள் - பட்டியலிட திமுக தயாரா? :

திமுக ஆட்சி வந்து 4 ஆண்​டு​கள் முடிவடைந்து விட்​டன. இந்த காலத்​தில் தமிழகத்​துக்கு என்ன செய்​தார்​கள் என்ற ரிப்போர்ட்கார்டை மக்​களிடம் முதல்​வர் கொடுக்க வேண்​டும். எனவே, முதல்​வர் இன்​னும் சாக்​கு​போக்கு சொல்​லாமல், மத்​திய அரசின் மீது பழி போடா​மல், அவரது சாதனை​களை பட்​டியலிட வேண்​டும். 511 தேர்​தல் வாக்​குறு​தி​களில் எவ்​வளவு நிறைவேற்​றியுள்​ளனர் என்​ப​தை சொல்​ல வேண்​டும்” இவ்​வாறு அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in