”என் கேள்விக்கு என்ன பதில்” : பாஜக, மோடி மீது அண்ணாமலை திடீர் தாக்கு : கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவு...!

கரப்பான் பூச்சி கட்சி விவகாரத்தில், பாஜக, பிரதமர் மோடியை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Annamalai criticized  BJP and Prime Minister Modi in connection with the 'cockroach party' issue
Annamalai criticized BJP and Prime Minister Modi in connection with the 'cockroach party' issuesource:thamizhalai,ai generated
3 min read

காவல்துறை to பாஜக

காவல்துறை அதிகாரி வேலைய உதறிவிட்டு, பாஜகவில் இணைஞ்சி, அந்தக் கட்சியோட தமிழக தலைவரானவரு தான் அண்ணாமலை.

சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சியில் இருந்து விலகிய அவர், We The Leaders என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கினாரு.

அண்ணாமலையின் அரசியல் இயக்கம்

அதை அரசியல் கட்சியாக்கி தேர்தலில் போட்டியிடுவது தான் அண்ணாமலையோட இலக்கு. உள்ளாட்சி தேர்தலில் அண்ணாமலை கட்சி களத்துக்கு வரும்ன்னு சொல்லப்படுது.

முதல்வரா இருந்த போது போராட்டத்திற்கு ஆதரவு

இந்தநிலையில தான், மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரா அறிக்கை விட்டு கவனம் ஈர்த்து இருக்காரு இது தொடர்பாக அண்ணாமலை தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ 2011ம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக அமைதியாக போராடியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, “என் கைகள் கட்டப்படாமல் இருந்திருந்தால் டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு எதிராக போராடியிருப்பேன்” என்று கூறினார். அன்று மோடி சொன்னது சரிதான். அதில் எந்த தவறும் இல்லை என்பதுதான் என் கருத்து.

கேள்வி கேட்டால், ஏஜெண்ட் முத்திரையா?

ஆனால் இன்று என்ன நடக்கிறது?. ஒருவரை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் வைத்திருக்க முடிகிறது. ஜாமீனுக்காக வருபவர்களை நிராகரிக்க முடிகிறது. தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு செயல் மாஜிஸ்திரேட்டே நினைத்தால் ஒருவரை அலைக்கழிக்க முடிகிறது.

ஜனநாயக நாட்டில் சட்டப்படி நடக்க வேண்டிய விஷயங்கள் நடக்கவில்லை என்று கேள்வி கேட்டால், உடனே வெளிநாட்டு ஏஜெண்ட் என்று முத்திரை குத்துகிறார்கள். பல பெயர்களை சொல்லி தாக்குகிறார்கள்.

என் மீதும் தாக்குதல்

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் கேட்டேன். அப்போதிலிருந்தே என் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.ஆனால் அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழகத்தின் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதுதான் முக்கியம் என்று நினைத்தேன். அதேநேரத்தில் என் மீதான தாக்குதல்களை ஒருவகையில் ரசிக்கவும் செய்தேன்.

தாக்குதல்களை ரசிக்கிறேன்

என்னை பாஜகவின் பி டீம் என்றும், தமிழகத்துக்கு அனுப்பப்பட்ட ‘துரந்தர்’ என்றும் சிலர் சொல்லி வந்தனர். இப்போது என் மீது பாஜகவினரே தாக்குதல் நடத்துவதால், இனி அப்படிச் சொல்ல முடியாது அல்லவா? அதனால்தான் இந்த தாக்குதல்களை ரசித்தேன்.

பாஜகவினருக்கு அட்வைஸ்

டெல்லியில் சிஜேபி போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து வைத்தது குறித்து செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினேன். அதற்குப் பிறகு எதிர்பார்த்தபடியே மீண்டும் என் மீது தாக்குதல்கள் தொடங்கிவிட்டன. பாஜகவில் உள்ள சிலருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்களுக்கு மறந்துவிட்டதா என்று தெரியவில்லை.

சிஜேபி போராட்டம் - உரிமை இருக்கிறது

2026-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதியே நான் பாஜகவிலிருந்து வெளியேறிவிட்டேன். காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்தும் போராட்ட முறைகளை நான் ஏற்காமல் இருக்கலாம். அவர்கள் செய்யும் பல விஷயங்கள் தவறு என்றுகூட நினைக்கலாம்.

ஆனால் ஒரு பிரச்சனைக்காக எதிர்ப்பு தெரிவிக்கவும், கேள்வி கேட்கவும், போராடவும் அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயமாக இருக்கிறது என்பதுதான் என் பதில்.

மோடி அரசு பதில் சொல்லுமா?

அதனால்தான் சில கேள்விகளை மீண்டும் கேட்கிறேன். இந்த கேள்விகள் சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். அதற்காக கேட்காமல் இருக்க முடியாது. மத்திய அரசு நேரடியாக பதில் சொல்ல வேண்டும். மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று எதிர்க்கேள்வி கேட்டு தப்பிக்கக் கூடாது.

1. ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்கு தடை ஏன்?

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சிஜேபி அமைப்பினர் கடிதம் கொடுத்தனர். அதற்குப் பிறகு அந்த இடத்தை போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலிலிருந்து மத்திய உள்துறை அமைச்சகம் எப்படி நீக்கியது?

2. போலீசே புகார்தாரர்.. போலீசே நீதிபதியா?

டெல்லி போலீஸ் உதவி ஆணையருக்கு சிறப்பு செயல் மாஜிஸ்திரேட் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவரை தடுப்பு நடவடிக்கையின் கீழ் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பதை அவரே முடிவு செய்கிறார். இந்த நடைமுறை இன்னும் எத்தனை காலத்துக்கு தொடரப் போகிறது?

சிஜேபி நிர்வாகிகள் மீது புகார் கொடுப்பதும் டெல்லி போலீஸ்தான். அந்த வழக்கில் முடிவு எடுக்கும் சிறப்பு செயல் மாஜிஸ்திரேட்டும் டெல்லி போலீஸ் உதவி ஆணையர்தான். அப்படியானால் என்ன முடிவு வரும் என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம்.

3. ஜாமீன் விசாரணைக்கு தாமதமாக வந்தது ஏன்?

அக்டோபர் 13-ந் தேதி ஜந்தர் மந்தரில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் தொடர்பான விசாரணை அக்டோபர் 19-ந் தேதி நடைபெற்றது. அப்போது சிறப்பு செயல் மாஜிஸ்திரேட்டான டெல்லி போலீஸ் உதவி ஆணையர் ஏன் வேண்டுமென்றே தாமதமாக வந்தார்?

பின்னர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்லி விசாரணையிலிருந்து ஏன் விலகினார்? இதெல்லாம் என்ன விளையாட்டு?

4. ஜாமீன் உத்தரவாதங்கள் நிராகரிப்பு ஏன்?

ஜாமீனுக்காக அளிக்கப்பட்ட 8 உத்தரவாதங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? ஜாமீன் உத்தரவாதம் கொடுக்க வந்தவரையே சிறப்பு செயல் மாஜிஸ்திரேட் ஏன் குறுக்கு விசாரணை செய்தார்?

5. பெல்லட் குண்டுகள் பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை என்ன?

நீட் போராட்டத்தின்போது டெல்லி போலீசார் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

போராட்டக்காரர்களுக்கு எதிராக விதிமுறைகளை மீறி செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

பாஜகவினர் போராடியதே இல்லையா?

அன்று பாஜக தொண்டர்கள் தடுப்புகளை தாண்டவில்லையா?இன்னொரு கேள்வியும் இருக்கிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது டெல்லியில் பாஜக தொண்டர்கள் யாருமே தடுப்பு உத்தரவுகளை மீறியதில்லையா? போலீசார் வைத்த தடுப்புகளை தாண்டி குதித்ததில்லையா?

போலீஸ் உத்தரவுகளை மீறியதில்லையா?அப்போது அவர்களையும் டெல்லி போலீசார் இப்படித்தான் நடத்தினார்களா? நிச்சயமாக இல்லை. இப்போது சிஜேபி நிர்வாகிகள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு சென்ற பிறகு, அவர்களை சிறப்பு செயல் மாஜிஸ்திரேட் விடுவித்ததாக அறிகிறேன்.

கரப்பான் பூச்சி உருவபொம்மை

சமீபத்தில் தசரா கொண்டாட்டத்தின்போது கரப்பான் பூச்சி உருவபொம்மையை எரித்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் சிஜேபிக்கு இலவச விளம்பரம் கொடுப்பது யார் என்று பார்த்தேன். எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. பாஜக எம்.எல்.ஏ. அசோக் கோயல்தான் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியிருக்கிறார்.

சிஜேபிக்கு இலவச விளம்பரமா?

இப்போது மீண்டும் கேட்கிறேன். பாஜக உண்மையிலேயே சிஜேபியை எதிர்க்கிறதா? அல்லது அந்த கட்சிக்கு இலவச விளம்பரம் கொடுக்கிறதா? சிஜேபியை பெரிய அரசியல் சக்தியாக காட்டி, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிக்க பாஜக நினைக்கிறதா?

இப்படியே போனால் சிஜேபி கட்சியினரே காசு கொடுத்து ஒரு விளம்பரக் குழுவை வைத்திருந்தால்கூட இவ்வளவு சிறப்பாக விளம்பரம் செய்திருக்க முடியாது.

காங்கிரஸ் என்ன செய்தது?

காங்கிரஸ் கட்சியிடமும் ஒரு கேள்வி கேட்டேன். எஸ்.ஐ.ஆர். பணிகள் நடந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியினர் உண்மையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் சிஜேபி அமைப்பினருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

சில தனிநபர்கள் தவறு செய்திருக்கலாம். அதற்காக நாட்டின் ஜனநாயக அமைப்புகள் அனைத்துமே தவறு செய்கின்றன என்று குற்றம்சாட்டக் கூடாது.

தேசவிரோதி முத்திரை நிறுத்துங்கள்

கடைசியாக இன்னொரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். யார் கேள்வி கேட்டாலும் தேசவிரோதி என்று முத்திரை குத்துவதை முதலில் நிறுத்துங்கள். வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டமான FCRA மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

நாட்டில் உள்ள விசாரணை அமைப்புகள் எல்லாம் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் யாராவது தொடர்பில் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள்.

இவ்வளவு அமைப்புகள் இருக்கும்போது, மத்திய அரசுக்கு எதிராக யார் போராடினாலும், யார் கருத்து சொன்னாலும் அவர்களை தேசவிரோதிகள் என்றும், வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கியவர்கள் என்றும் கூறுவது மிகவும் சலிப்பாக இருக்கிறது.

12 ஆண்டுகளாக பாஜக ஆட்சிதான்

மத்திய அரசு ஒன்றை மறந்துவிட்டதாக நினைக்கிறேன். டெல்லியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருப்பது பாஜகதான். ஆனால் இன்றைக்கும் தன்னை முக்கியமான அரசியல் சக்தியாக காட்டிக்கொள்வதற்காக எப்போதும் ஏதாவது ஒரு எதிரியை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in