

இந்தியா கூட்டணி மனு
Annamalai Accused INDIA Alliance on Judiciary : திருப்பரங்குன்றம் வழக்கை விசாரித்து வரும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மனு கொடுத்து இருக்கிறார்கள்.
நீதித்துறையை மிரட்டுவதா?
இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் பதிவில், “ நீதிபதிகளையும், நீதித்துறையையும் மிரட்ட தகுதி நீக்க நடவடிக்கையை ஒரு கருவியாக திமுக மற்றும் இண்டி கூட்டணி பயன்படுத்துகிறது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் தகுதி நீக்க நோட்டீஸ் எதற்கு?
வெறும் சிறுபான்மை அரசியல் தான்
சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தவிர வேறொன்றையும் வெளிப்படுத்தவில்லை. அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும், இந்தியா கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே. அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
தீர்ப்புகளை மதிப்பதே இல்லை
எந்தவொரு நீதிபதியின் தீர்ப்பையும் இந்தியா கூட்டணி விரும்பவில்லை என்றால், நீதித்துறையை அடிபணியச் செய்ய அச்சுறுத்தும் ஒரு கருவியாக, பதவி நீக்க நடவடிக்கையை பயன்படுத்துவார்கள் என்பதை மக்களுக்கு சொல்கின்றனரா?
அரசியலமைப்புக்கு அச்சுறுத்தல்
அரசியலமைப்பிற்கு இதை விட பெரிய அச்சுறுத்தல் என்ன இருக்க முடியும்? திமுக மற்றும் இண்டி கூட்டணி மீண்டும் ஒருமுறை தங்களுக்கு, பிரிவினைவாத அரசியல்தான் முதலில் என்பதை நிரூபித்துள்ளன” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துக் கொண்டுள்ளார்
======.