

சோழர்கள் - திருமா சர்ச்சை பேச்சு
Annamalai Condemns Thirumavalavan Controversy Speech : சோழ மன்னர்கள் காலத்தில் தமிழ் கலாச்சாரம் மற்றும் கோவில்களில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருதமயமாக்கல் நடைபெற்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சோழ, பாண்டியர்களை இழிவுபடுத்துவதா?
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தள பதிவில், “தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடக்கும் அனைத்துத் தவறுகளுக்கும் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளையே நீண்டகாலமாக குற்றம்சாட்டி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், தற்போது 10 நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்று மாபெரும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை அவதூறாகப் பேசியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழை உலகளவில் கொண்டு சென்றவர்கள்
தமிழ் மொழியானது இன்றைய தமிழகத்தின் புவியியல் எல்லைகளைக் கடந்து உலகெங்கும் தழைத்தோங்கக் காரணமாக இருந்தவர்கள் சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள். அத்தகைய புகழ் பெற்ற மன்னர்களின் ஆட்சிக்காலத் தைப் பற்றி திருமாவளவன் கூறியிருக்கும் கருத்துகள் மிகவும் ஆபத்தானவை.
மன்னர்கள் பெருமைக்கு இழுக்கு
இது சோழ மற்றும் பாண்டியர்களின் மரபுக்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகும். ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய பெயர்கள் தமிழ் பெயர்களா என அவர் கேள்வி எழுப்புவாரானால், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, தயாநிதி, கலாநிதி போன்ற பெயர்கள் தமிழ் பெயர்களா? என்ற கேள்வியும் எழுகிறது.
தமிழுக்கு திமுக செய்தது என்ன?
தமிழ் மொழியின் உண்மையான வளர்ச்சிக்கும், அதன் உலகளாவிய அங்கீ காரத்துக்கும் ஏதேனும் ஒரு அரசியல் குழு மிகக் குறைந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறது என்றால், அது திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான்.
தமிழக வரலாறை படியுங்க
தமிழகத்தின் வரலாறு என்பது 1949-ல் திமுக தொடங்கப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கவில்லை என்பதை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, தமிழகத்தின் பல பிரச்சினைகள் அந்தப் புள்ளியிலிருந்தே தொடங்கின என்பதே உண்மை” இவ்வாறு அந்தப் பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
===============================