அப்பாவி மக்களுக்கு துரோகம் செய்தது திமுக : அண்ணாமலை!

'கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை தண்டனைக் காலம் முன்பாகவே விடுவித்து, உயிரிழந்த அப்பாவி மக்களுக்குத் துரோகம் செய்தது திமுக', என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
Annamalai has criticized the DMK for releasing the Coimbatore blast convicts before their sentence, betraying the innocent people who died
Annamalai has criticized the DMK for releasing the Coimbatore blast convicts before their sentence, betraying the innocent people who diedgoogle
1 min read

அண்ணாமலை அறிக்கை

Annamalai has criticized the DMK for releasing the Coimbatore blast convicts before their sentence, betraying the innocent people who died ; கோவையில், கடந்த 1998ம் ஆண்டு திமுக ஆட்சியில், இதே நாளில், பயங்கரவாதிகளால் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதில், 58 உயிர்களைப் பறிகொடுத்தும், சுமார் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததும், நமது மனதில் ஆறாத வடுவாகப் பதிவாகியிருக்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.

கோவையின் வளர்ச்சி பாதிப்பு

மேலும், இந்திய அளவில், பொருளாதாரத்தில் முதல் இடங்களில் வந்திருக்க வேண்டிய நமது கோவை மாநகரம். பிரிவினைவாத சக்திகளாலும், தேர்தல் வாக்குகளுக்காக அவர்களுக்குத் துணை போகும் திமுக உள்ளிட்ட கட்சிகளாலும் பல ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது.

முன்கூட்டியே விடுவிப்பு

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை தண்டனைக் காலம் முன்பாகவே விடுவித்து, உயிரிழந்த அப்பாவி மக்களுக்குத் துரோகம் செய்தது திமுக.

அப்பாவி பொதுமக்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி

இன்றும், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலை, சிலிண்டர் வெடிப்பு என்று கூறி, மீண்டும் பயங்கரவாதிகளுக்குத் துணை போகிறது.

தேர்தல் வாக்குகளுக்காக, பொதுமக்கள் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் திமுகவை அகற்றுவதே, கோவை பயங்கரவாதிகள் தாக்குதலில் தங்கள் உயிரை இழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in